ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. பாஜகவின் நிலைப்பாடு என்ன? ஆலோசனைக்கு பின் ஜெயக்குமார் பேட்டி!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.27ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிடும் விருப்பத்தை தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்பதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்தார்.

கமலாலயம் வந்த இபிஎஸ் ஆதரவாளர்கள்
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுகவின் இரு அணிகளும் கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற முனைப்பு காட்டி வருகின்றனர். ஏற்கனவே ஓபிஎஸ் நேரடியாக சென்று தமாகா தலைவர் ஜிகே வாசனை சந்தித்து ஆதரவு கோரினார். தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர்.

அதிமுக - பாஜக சந்திப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் ஆதரவு கோரினர். அப்போது பாஜக தரப்பில் அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா. சிபி ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் இருந்தனர்.

அண்ணாமலை அறிவிப்பார்
இந்த ஆலோசனைக்கு பின் கமலாலயத்தில் இருந்து வெளிவந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவளிக்கக் கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

பாஜக நிலைப்பாடு
ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இருப்பினும், இடைத்தேர்தல் என்பதால் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து கூட்டணி தர்மத்தின்படி பாஜக முடிவு எடுக்கும் என்று கூறி இருந்தார். ஆனால் அதிமுகவில் இரு அணிகளும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாஜக தனித்துப் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications