அண்ணன் சீர் திட்டம்! ஒரு பட்டுப்புடவை விலை எவ்வளவு தெரியுமா? எத்தனை பேருக்கு வழங்கப்படும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணன் சீராக தவெக அரசு கொடுக்க போகும் பட்டுப்புடவையின் விலை என்ன என்பது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். அரசு கொடுக்கும் புடவை தரமானதாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஒரு பட்டுப்புடவையின் விலை என்பது குறைந்தது ரூ 5000 என நிர்ணயம் செய்திருக்கிறோம். ஒரு பட்டுப்புடவைக்கு ரூ 5000 நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்பதால் அது நிச்சயம் தரமானதாக இருக்கும் என்பது மக்கள் எண்ணமாக இருக்கிறது.

tvk tamil nadu budget 2026 2026

இதனால் "முதல்வர் விஜய்க்கு எங்கள் நன்றியை தெரிவியுங்கள்" என நிறைய பெண்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த பட்டுப்புடவையுடன் 8 கிராம் தங்கமும் கிடைக்கும்.

சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அண்ணனாகவும், தம்பியாகவும் இருந்து, அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பவர்தான் நமது முதலவர் விஜய். திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகும்.

இந்தத் தருணத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாட்டின் பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதும் நமது முதல்வர், அப்பெண்களின் திருமண நன்னாளில் நமது அரசின் சார்பாக எட்டு கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்கவிருக்கிறார். இத்திட்டத்தினைச் செயல்படுத்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நம்முடைய கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தினை கொண்டு வந்து, மாணவர்களின் வயிற்றுப் பசியை மட்டுமின்றி கல்விப் பசியையும் போக்கினார்.

நண்பா மற்றும் நண்பிகள் மேல் பேரன்பு கொண்ட நம் முதல்வர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் சூட்டி, பெருந்தலைவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தினை முதல்வர் விஜய் விரிவுபடுத்தி உள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் நாள் முதல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம், கூடுதலாக 15,434 பள்ளிகளில் பயிலும் 1514 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்கு திருத்த வரவு செலவு மதிப்பீடுகளில் 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கான இல்லம்:

மூத்த குடிமக்களுக்குக் கண்ணியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான முதுமை மற்றும் விரிவான சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்து, முதியோருக்கு உகந்த சூழல் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

மூத்த குடிமக்களுக்கான அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் இல்லங்கள், தகுதிவாய்ந்த பராமரிப்பாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும்.

முதலாம் ஆண்டில், 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 40 பயனாளிகள் இடம்பெறுவர். இத்திட்டத்திற்காக 68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும் நூலகங்கள், யோகா, தியான வகுப்புகள் மற்றும் உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் நிறுவப்படும். மூத்த குடிமக்களின் மக்கள்தொகை அடிப்படையில் இம்மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

500 அங்கன்வாடி மையக் கட்டிடங்கள்

எதிர்காலத் தலைமுறையான நம் வீட்டுக் குழந்தைகளின் வாழ்வு கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்பும் உள்ளம் கொண்டவர் நம் முதல்வர் விஜய். விஜய் மாமா விஜய் மாமா என பாசம் பொங்க அழைக்கும் குழந்தைச் செல்வங்களைப் பற்றி நாள்தோறும் சிந்திப்பவர் அவர்.

அக்குழந்தைகள் தினமும் வரும் அங்கன்வாடி மையங்களில் அவர்களுக்கான ஆரம்பகால பராமரிப்பு மற்றும் சேவையை நல்ல முறையில் வழங்கிடும் பொருட்டும், மையத்திற்கு வரும் குழந்தைகள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதை உறுதி செய்திடும் பொருட்டும் பாதுகாப்பான குடிநீர், கழிவறைகள், மின்சார இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய, 500 அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் நடப்பாண்டில் கட்டப்படும்.

திருநர்களுக்காக அரண் தங்குமிடம்:

திருநர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளிப்பை உறுதிசெய்யும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TNSDC) மூலம் பல்வேறு தொழில்களில் திறன் பயிற்சி வழங்கப்படும்.

மேலும், அவர்கள் தொழில் தொடங்குவதற்கும். நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் மானியத்துடன் இணைந்த வங்கிக் கடன் வசதியும் வழங்கப்படும். நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை சுயதொழில் மானியத்துடன் வங்கிக் கடன் பெற ஊக்குவிக்கப்படுவார்கள்.

சமூக மற்றும் குடும்பச் சவால்களை எதிர்கொள்ளும் திருநர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம், உணவு, ஆலோசனை மற்றும் மறுவாழ்வு ஆதரவை வழங்குவதற்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிட வசதிகள் நிறுவப்படும்.

மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை, தேர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளுக்காக பிற நகரங்களுக்குப் பயணம் செய்யும் திருநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 15 மாவட்டங்களில் குறுகியகால தங்குமிட வசதிகள் நிறுவப்படும்.

இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 9.818 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 812 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றால் ஒரு பட்டுப்புடவை 5000 என வைத்துக் கொண்டாலும் 16,24,000 பேருக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+