சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூர்ணிமா அன்று பார்ஃமுக்கு வந்த அன்னபூரணி! கை ஏன் இப்படி நடுங்குது.. புல்லரித்துப் போன பக்த கோடிகள்!

Google Oneindia Tamil News

சென்னை : தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கி தற்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் அருள் வந்து விட்டதாக சிஷ்யர்கள் கூட்டத்தை கூட்டி குரு பூர்ணிமா நாளன்று அவர் செய்த அருள் வாக்கு லீலைகள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களை கேலிக்குள்ளாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பிரபலம் ஆன அன்னபூரணி அரசு அம்மா எனும் பெண் சாமியார், தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வபோது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அட்வைஸ் கொடுத்து பக்தி பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திடீரென சாமியார் அவதாரம் எடுத்தார். அப்போது முதல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளாமல், ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார்.

'செல்ஃபி வித் அண்ணா'வா? பாஜக பன்றது வெட்கக் கேடு! கே.எஸ்.அழகிரிக்கு வந்த கடும் கோபம்! என்னவாம்? 'செல்ஃபி வித் அண்ணா'வா? பாஜக பன்றது வெட்கக் கேடு! கே.எஸ்.அழகிரிக்கு வந்த கடும் கோபம்! என்னவாம்?

திடீர் சர்ச்சை

திடீர் சர்ச்சை

உண்மையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரியாக சொல்லப்போனால் புத்தாண்டு தினத்தன்று செங்கல்பட்டு பகுதியில் ஆதிபராசக்தி அம்மாவின் திவ்ய தரிசன நிகழ்ச்சி நடைபெறும் என விளம்பரங்கள் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தில் இருந்த சாமியாரின் முகத்தை பார்த்த நெட்டிசன்கள் இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என மண்டையை குழப்பிக் கொண்டனர் மேலும் நன்கு தெரிந்த முகம் போல இருந்த நிலையில் நீங்க யார் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என தேடத் தொடங்கினர்.

சாமியார் அவதாரம்

சாமியார் அவதாரம்

அப்போதுதான் பாட்ஷா படத்தில் வரும் போது போல ஒரு ஃப்ளாஷ் பேக் வந்தது. வேறு யாருமில்லை அரசு என்பவருக்கும் அன்னபூரணி என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் தொடர்பாக பிரபல தனியா தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர் என்பதும் அதன் பிறகு சில நாட்கள் மாயமாகி இருந்தவர் திடீரென சாமியார் அவதாரம் எடுத்து பக்தர்களுக்கு அருள் வாக்கு தருவதாக கூறி கல்லா கட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

போலி பெண் சாமியார்

போலி பெண் சாமியார்

இதையடுத்து அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட திருமண மண்டபத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தன்னைத் தானே சாமியார் என்று அறிவித்துக் கொண்டுள்ள அவர் தற்போது மடம் ஒன்றை ஆரம்பித்து சில கோஸ்டிகளை அமர வைத்து தனக்குத்தானே பூஜை புனஸ்காரங்கள் செய்து facebook லைவில் வேறு அடிக்கடி வந்து அருள் சொல்லுகிறார். மேலும் தொலைபேசியில் தீட்சை பெற்றால் ஐஏஎஸ் கலெக்டர் ஆகலாம், அடுத்த நாளே அமைச்சராகலாம் என்ற ரேஞ்சுக்கு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.

அன்னபூரணி அரசு அம்மா

அன்னபூரணி அரசு அம்மா

அவரையும் நம்பி ஒரு கூட்டம் சில்லறைகளை சிதற விட நன்கு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா இந்நிலையில் குரு பௌர்ணமி அன்று நடைபெற்ற அம்மாவின் திவ்ய தரிசன நிகழ்ச்சி என்று facebook பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் பிரபலமான ஓம் மாகாளி நீ வா தாயி என்ற பாடலின் பின்னணியில் பூ தூவ கற்பூர ஆரத்தி உடன் ஜெகஜோதியாக காட்சியளிக்கிறார் குடிசை அடியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அன்னபூரணி.

நெட்டிசன்கள் கமெண்ட்

நெட்டிசன்கள் கமெண்ட்

சிறிது நேரத்தில் பக்தர்களின் பூஜையால் அம்மனுக்கு அருள் வர ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது கதையாக கைகள் பயங்கரமாக வைப்ரேஷன் ஆகியது. பின்னர் தான் தெரிந்தது அம்மாவுக்கு அருள் கூடி பக்தர்களுக்கு பாச மழை பொழிந்து கொண்டிருக்கிறார் என்பது. இதையெல்லாம் விட ஒரு படி மேலேயே போய் சில பக்த கோடிகள் அம்மாவுக்கு பாத பூஜை செய்ய அவரது காலை கழுவி மலர்களால் மரியாதை செய்தனர். இந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

English summary
Controversy by participating in a private television show , now Annapoorani Govtar Amma has come in the name of Annapoorani Amma, and she gathered a group of disciples and made fun of her on Guru Purnima day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X