Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களம் கண்ட முதல் தேர்தலிலேயே பெருவெற்றி பெற்ற அன்னியூர் சிவா.. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு 10,602 வாக்குகளும் கிடைத்தன.

mk stalin vikravandi by election 2024 vikravandi by election results vikravandi by polls 2024

முதல்வரை சந்தித்து ஆசி: இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கௌதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது அன்னியூர் சிவாவுக்கு கிடைத்த வெற்றி இல்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்" எனத் தெரிவித்தார்.

mk stalin vikravandi by election 2024 vikravandi by election results vikravandi by polls 2024

யார் இந்த அன்னியூர் சிவா?: தனது 16வது வயதில் திமுகவில் இணைந்தவர் அன்னியூர் சிவா. பி.ஏ வரலாறு படித்த சிவா, 1988ல் தபால் நிலையங்களில் இந்தியில் எழுதப்பட்டதை அழித்து, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.1999 ஆம் ஆண்டு முதல் முறையாக கட்சியில் பொறுப்புக்கு வந்தார் அன்னியூர் சிவா. ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு, 2003ல் விழுப்புரம் மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆனார். கடந்த 2020ஆம் ஆண்டில் திமுக விவசாய அணித் துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு முதல் மாநில விவசாய தொழிலாளர் அணியின் செயலாளராக இருந்து வருகிறார் அன்னியூர் சிவா.

முதல் தேர்தல்: தனது 37 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல தேர்தல்களில் கட்சிக்காக வேலை செய்திருந்தாலும், எந்த ஒரு தேர்தலிலும் அன்னியூர் சிவா போட்டியிட்டதில்லை. முதல் வாய்ப்பாக, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் சீட் கிடைத்தது. முதல் வாய்ப்பிலேயே, மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினர் என்ற இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் அன்னியூர் சிவா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+