தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்! இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்! யார் அவர்கள்?
சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 2 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று ஒரு வழியாக தேர்வுக் குழுவால் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு;

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (20-12-2022) காலை சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் கலந்து கொண்டார். இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் V.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாக ராஜ இளங்கோவும், கண்ணதாசனும் நியமனம் ஆகியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தை பொறுத்தவரை கடந்த 1997ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் இப்போது 2 புதிய உறுபினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் மீதமிருக்கும் காலிப்பணியிடங்களையும் விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications