எடப்பாடிக்கு மீண்டும் சிக்கல்.. “அந்த ஆர்டர் இருக்கே!” அறப்போர் இயக்கம் கையில் எடுக்கும் அஸ்திரம்!
சென்னை : ஏற்கனவே ஒரு முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கையில் எடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அறப்போர் இயக்கம் தயாராகி வருகிறது.
நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறப்போர் இயக்கம் அறிவித்துள்ளது. ஐகோர்ட் தீர்ப்பு ஏற்கனவே பல தீர்ப்புகள் மூலம் முடிவு செய்யப்பட்ட சட்ட நிலைபாட்டிற்கு புறம்பாகவும் ஏற்கனவே இதே போன்ற வேறொரு அமைச்சர் அறப்போர் இயக்கத்தின் மீது தொடுத்த வழக்கின் ஆணைக்கு புறம்பாகவும் உள்ளதால், மேல்முறையீடு செய்து இந்த தடைகளை அகற்றுவோம் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

ஈபிஎஸ் மீது அறப்போர் இயக்கம் புகார்
கடந்த 2016-21 ஆம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது.

ஈபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு
இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது, எனவே மான நஷ்டஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தன்னை பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

எடப்பாடி வாதம்
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், "எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது. ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை. டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. மனுதாரரின் புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் இவ்வாறு குற்றம்சாட்டப்படுகிறது" என்று வாதிடப்பட்டது.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள்
அப்போது அறப்போர் இயக்கம் சார்பில், "முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் தான் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் மாற்று கருத்து என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. அதுதான் வலுவான ஜனநாயகத்தின் அடிநாதம்" என வாதிடப்பட்டது.

இடைக்கால தடை
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாகப் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கோரிய பிரதான வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

அறப்போர் இயக்கம் மேல்முறையீடு
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து அறப்போர் இயக்கம் மேல்முறையீடு செய்யவுள்ளது. "முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு கிருஷ்ணன் ராமசாமி இடைக்கால தடை விதித்துள்ளார். ஆனால் இது ஏற்கனவே பல தீர்ப்புகள் மூலம் முடிவு செய்யப்பட்ட சட்ட நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும் ஏற்கனவே இதே போன்ற வேறொரு அமைச்சர் அறப்போர் இயக்கத்தின் மீது தொடுத்த வழக்கின் ஆணைக்கு புறம்பாகவும் உள்ளது. எனவே மேல்முறையீடு செய்து இந்த தடைகளை அகற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது." என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

வேலுமணி கேஸ்
2019ல் அறப்போர் இயக்கம் தனக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாகக் கூறி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அறப்போர் இயக்கம் மீது உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்கு ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு நிலுவையில் இருப்பதால், தன்னைப் பற்றி மீடியாவிடம் பேசுவது, செய்தி வெளியிடுவது ஆகியவற்றுக்கு அறப்போர் இயக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி, உயர்நீதிமன்றத்தில் கோரினார் வேலுமணி.

வேலுமணியின் மனுக்கள் தள்ளுபடி
இந்த வழக்கில் அப்போது தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், அறப்போர் இயக்கம் தன்னைப் பற்றி செய்தி வெளியிட தடை கேட்டு அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அதன்பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு, அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அடையாள அபராதமும் விதித்தது. பின்னர், எஸ்.பி.வேலுமணி தரப்பு விளக்கத்தை அடுத்து அபராதத்தை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சிக்கல்
அதைச் சுட்டிக்காட்டியே, எடப்பாடி பழனிசாமி வழக்கில் அறப்போர் இயக்கம் மேல்முறையீடு செய்யவுள்ளது. எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த இதேபோன்ற வழக்கில் ஐகோர்ட் பிறப்பித்த ஆணையைச் சுட்டிக்காட்டு, தற்போது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது அறப்போர் இயக்கம். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் குடைச்சல் ஏற்பட்டுள்ளது.
-
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க












Click it and Unblock the Notifications