அவசர அவசரமாக ஓடிய எடப்பாடி பழனிசாமி.. "அங்கே" ஏன் போனார்? பிளான் வேற.. டக்குனு திரும்பிய பாஜக, ஓபிஎஸ்
அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரும் மெசேஜ் என்ன தெரியுமா
சென்னை: அதிமுக கட்சி ஆபீசுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றது முதல், "பச்சோந்தி" என்று விமர்சித்ததுவரை அனைத்து நிகழ்வுகளையும் கண்டு ஓபிஎஸ் கூடாரம் கடுப்பில் உள்ளதாம்.
அதிமுக விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதற்கும், அது தொடர்பான தீர்ப்பு வருவதற்கும் எப்படியும் காலதாமதமாகும், எம்பி தேர்தல் வரை இழுபறியாகவே இழுத்து செல்லக்கூடும் என்கிறார்கள்..
இதனால், அப்செட்டில் உள்ளது ஓபிஎஸ் டீம்.. சில விஷயங்கள் அடுத்தக்கட்டம் செல்ல முடியாமல் அப்படியே அந்த பக்கம் தேங்கி நிற்பதாக கூறப்படுகிறது..

30 தலைகள்
முதலாவதாக, எடப்பாடி டீமில் இருப்பவர்களை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியை ஓபிஎஸ் மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு சசிகலா தரப்பில் ஆதரவு பச்சைக்கொடி காட்டப்பட்டது.. அதிலும் 30 எம்எல்ஏக்களுக்கு வலை விரிக்கப்பட்டது.. இதைதவிர, 27 மாவட்ட செயலாளர்களிடம் சசிகலாவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்பட்டது.. இந்த அணி தாவல் முயற்சிக்காக 100 கோடி ரூபாயை களமிறக்கவும், சசிகலா தரப்பு ஓகே சொல்லிவிட்டதாகவும் சொன்னார்கள். ஆனால், இது எதுவுமே அடுத்தக்கட்டத்துக்கு செல்லாமல் நிற்கிறதாம்,.

ஓவர் + ஓவர்
அடுத்ததாக, கடந்த ஒரு மாத காலமாகவே, ஓபிஎஸ் பக்கம் வருவதாக சொல்லியிருந்த முக்கிய புள்ளிகள் சத்தமில்லாமல் இருப்பதாக தெரிகிறது.. "உங்கள் பக்கமே வந்துவிடுகிறோம், கோர்ட் தீர்ப்பு மட்டும் வந்துவிடட்டுமே" என்று சொல்லி கொண்டிருந்தவர்கள். தற்போது ஜகா வாங்கிவிட்ட நிலையில், கப்சிப் மோடுக்கும் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.. இதற்கு நடுவில் கோவையில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்படவிருந்த நிலையில், திடீரென அந்த பிளானும் நிறுத்தப்பட்டு காஞ்சிக்கு மாறியுள்ள நிலையில், இதுவும் ஓபிஎஸ்ஸின் பின்வாங்கலாகவே பார்க்கப்படுகிறது.

கீ - பச்சோந்தி
ஆனால், எடப்பாடி பழனிசாமி பக்கம் காற்று ஆதரவாக வீசிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த அதிரடிகளுக்கு தயாராகி வருகிறார்.. அதன்முதல் அதிரடியாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து சென்றதுதான் என்கிறார்கள்.. அலுவலக சாவி எடப்பாடி கைக்கு வந்துவிட்ட நிலையிலும், நீதிமன்ற உத்தரவுகள் சாதகமாக இருந்தும்கூட, எடப்பாடி பழனிசாமி அலுவலகம் பக்கம் வராமல் இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் திடீரென என்ட்ரி தந்தார். அதுவும் முந்தைய நாள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, மறுநாளே அலுவலகத்துக்கு வந்திருந்தார்..

பச்சோந்தி
பச்சோந்தியைவிட மோசமானவர், தரம்தாழ்ந்தவர் என்று வழக்கத்தைவிட சற்று கூடுதலாகவும் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை விமர்சித்து பேட்டியும் தந்திருந்தார். இவ்வளவு அவசரமாக முடிவு செய்து எடப்பாடி ஏன் அலுவலகத்துக்கு வந்தார்? என்ற கேள்வியும் அதிமுகவுக்குள் எழுந்துள்ளது.. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி வந்திருந்தது சில கணக்குகளோடுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

பிரதோஷம் + குஷி
தற்சமயம் உரிமை, அதிகாரம், ஆதரவு என அனைத்து பலமும் இருந்தாலும், தலைமை அலுவலகம் செல்ல நல்ல நாள் வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருந்தாராம்.. அதன்படிதான், 8ம் தேதி நல்ல நாள் + ஓணம் பண்டிகை + பிரதோஷம் + என அனைத்தும் சாதகமாக இருந்ததால், உடனடியாக அலுவலகத்துக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கடந்த 3 மாத காலமாகவே, ரத்தத்தின் ரத்தங்கள் கலக்கத்திலும் + வருத்தத்திலும் + குழப்பத்திலும் உள்ளதால், அவர்களுக்கு தெம்பூட்டுவதற்காகவே எடப்பாடி கட்சி ஆபீசுக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ராயப்பேட்டை + ஆபீஸ்
"அதிமுக தற்போதும் வலுவாகவே இருக்கிறது.. அதிலும் கட்சி, தங்களிடம்தான் இருக்கிறது, இங்கு வேறு யாருக்கும் பலமில்லை" என்பதை பாஜக, ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட அனைவருக்கும் வெளிப்படுத்தும்விதமாகவே, ராயப்பேட்டை அலுவலகத்துக்கு எடப்பாடி சென்றதாக சொல்கிறார்கள்.. இது சோர்ந்து போயுள்ள தொண்டர்களுக்கு ஒரு எழுச்சியை, உத்வேகத்தை தருவதாக இருக்கும் என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்துக்கு உடனடியாக சென்றதாக கூறப்படுகிறது..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications