நான் பார்த்து ஓகே சொன்னேனே! எடப்பாடியை புலம்ப வைத்த "எம்பி"! செலவு பண்ணட்டும்.. ஓபிஎஸ் மாஸ்டர்பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நாளை நடக்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் மன வருத்தத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் அவருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடுத்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை இரட்டை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது.

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லாது என்று தனி நீதிபதி ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு ஆகும் இது.

கடந்த வாரம் இந்த தீர்ப்பு வந்ததில் இருந்தே அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் கை மீண்டும் ஓங்க தொடங்கி உள்ளது. அதிமுகவில் மீண்டும் அவருக்கான ஆதரவு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

எடப்பாடி

எடப்பாடி

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவே இல்லை. அதனால் அவரை எளிமையாக வீழ்த்திவிடலாம் என்றுதான் கணக்கு போட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் ஓ பன்னீர்செல்வம் பெரிதாக நிர்வாகிகள் சப்போர்ட் இல்லை என்றாலும் கூட சட்ட ரீதியாக மோதி தனக்கு ஆதரவாக தீர்ப்பு பெற்றுவிட்டார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தற்போது மேல்முறையீட்டு மனுவில் எடப்பாடி வென்றாலும் ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் செல்வார்.. ஓபிஎஸ் வென்றால் எடப்பாடி உச்ச நீதிமன்றம் செல்வார். இதனால் வழக்கு கண்டிப்பாக சில வாரங்களுக்கு நடக்கும்.

என்ன ஆகும்?

என்ன ஆகும்?

இதன் காரணமாக அதிமுகவில் வரும் நாட்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதும் கூட நிர்வாகிகள் பலர் வரிசையாக எடப்பாடி கேம்பில் இருந்து ஓ பன்னீர்செல்வம் கேம்பிற்கு செல்ல தொடங்கி உள்ளனர். முக்கியமாக எடப்பாடியின் கோட்டையாக விளங்கும் மேற்கு மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றார்.

எடப்பாடி ஆதரவாளர்கள்

எடப்பாடி ஆதரவாளர்கள்

இவர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர். திண்டுக்கல் சீனிவாசன் பக்கம் இருந்தவர் தற்போது ஓபிஎஸ் பக்கம் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை கூட கோவையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றனர். எடப்பாடி அணியில் இருந்த இவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். வரும் நாட்களில் மேலும் இதேபோல் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி வரிசையாக எடப்பாடி ஆதரவாளர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்கிறார்கள்.

தர்மர்

தர்மர்

இன்று கூட அதிமுக எம்.பி. தர்மர் தலைமையில் ஓபிஎஸ்-க்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ராஜ்ய சபா எம்பி தர்மர் தலைமையில் ஓபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர் மட்டுமின்றி மேலும் சில நிர்வாகிகள் எடப்பாடி தரப்பில் இருந்து தாவி ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக எடப்பாடி தரப்பு கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதில்.. தர்மர் எம்பியாக முக்கிய காரணம் எடப்பாடி. அவரை பார்த்து ஓகே சொன்னதே எடப்பாடிதான். ஆனால் இப்போது தர்மம் ஓபிஎஸ் பக்கம் நிற்கிறார். வருத்தமாக இருக்கிறது என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் ஆதரவாளர்களோ.. எடப்பாடி பொதுக்குழுவிற்காக செலவு செய்துவிட்டார். அவர் செலவு செய்து தவறு செய்துவிட்டார். இப்போது பாருங்க அவர் செலவு செய்தும் நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் வருகிறார்கள். எடப்பாடி செலவு செய்யட்டும் என்று வேடிக்கை பார்த்துவிட்டு.. இப்போது தீர்ப்பிற்கு பின் செலவே இல்லாமல் நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கிறார். இதுதான் அவரின் சாணக்யத்தனம், என்கிறார்கள் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+