“எனக்கு ஓட்டுக்கு பணம் தரும் பழக்கமே இல்லை.. ஏசி சண்முகம் பணம் கொடுத்தும் ஜெயிச்சதே இல்லை” - பிடிஆர்
மதுரை: "என் வாழ்க்கையில் வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கமே இல்லை. வாக்குக்கு பணம் கொடுக்காமல் தோல்வியடைந்த வரலாறும் கிடையாது. தொடர்ந்து வெற்றி வெற்றி" என்று மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மத்தி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி களம் காண்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தற்போது காரசாரமான வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகியும், சுந்தர் சி-யின் மனைவியுமான குஷ்பு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சித்து சமீபத்தில் கடுமையாகப் பேசி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைச்சர் பிடிஆர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, இருவரும் பொதுக் கூட்டங்களிலும் கடும் வார்த்தைப் போர் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மத்தி சட்டசபை தொகுதியின் ஆறுமுச்சந்தி பகுதியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடந்தது. தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை வகித்துப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுக, பல ஆண்டுகளாக மதுரை மத்திய தொகுதியில் நேரடியாக வேட்பாளரை நிறுத்தவில்லை. தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கி அவர்களுடைய வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்.
ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து விரட்டப்பட்ட ஏ.சி.சண்முகத்தின் அங்கீகாரம் பெறாத கட்சிக்காக இறக்குமதியானவர்தான் வேட்பாளர் சுந்தர் சி. அவர் வாழ்க்கையில் ஒரு நாள் கூட பொதுப்பணியில் ஒரு ரூபாய்கூட செலவு செய்தது இல்லை. போராட்டத்தில் பங்கேற்றதும் இல்லை. அவருக்கு இரட்டை இலை சின்னத்தை குத்தகைக்குக் கொடுத்துள்ளார்கள்.
இந்த பிடிஆருக்கு வாழ்க்கையில் வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கமே இல்லை. வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தோல்வியடைந்த வரலாறும் கிடையாது. தொடர்ந்து வெற்றி வெற்றி. ஆனால், ஏ.சி.சண்முகத்துக்கு வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த வரலாறு கிடையாது. வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற்ற வரலாறும் கிடையாது. தொடர்ந்து தோல்வி, தோல்வி, தோல்வி" என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications