"அவரும்" இங்கே வரப்போறாராமே.. போனில் மோடி என்ன பேசினார்?.. 2 பக்கமும் குறி வைக்கும் பாஜக..!

மதிமுக, பாமக அதிருப்தியாளர்கள் பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக இப்போதே தயாராகி வருவதாக தெரிகிறது.. அதற்கான 2 விதமான முக்கிய முன்னெடுப்புகளில் இறங்கி உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பாஜகவின் எழுச்சி சற்று அதிகமாகி கொண்டே வருகிறது.. சரியோ? தவறோ? எதையாவது சர்ச்சையாக அல்லது பரபரப்பாக பேசி, எப்போதும் பாஜகவை பேசுபொருளாக வைத்து வருகிறார் அண்ணாமலை.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு முக்கியத்துவம் தரவில்லை, பேச்சுவார்த்தையில் இழுபறி நடக்கிறது என்று தெரிந்ததுமே, பாஜக மேலிடம் கொந்தளித்ததாம்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு போனை போட்டு பேசினாராம்.. ஒருவரை நம்பியே தேர்தலில் கூட்டணி வைத்து ஏன் போட்டியிட வேண்டும்? தனித்து போட்டியிட்டால், கடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டுகளை விட கூடுதலாக பெறலாம்.. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், தனித்தே போட்டியிடுங்கள் என்று அண்ணாமலையிடம் சொன்னதே பிரதமர் மோடிதானாம்.. அதனால்தான், தனித்து போட்டி என்று அண்ணாமலை பகிரங்கமாக அறிவிக்க நேர்ந்தது என்றார்கள்..

 பலே பிளான்

பலே பிளான்

மேலிடம் நினைத்தது போலவே, அதிக ஓட்டுக்களையும் பெற்று, பாஜக முன்னேறியது தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமல்ல, ரிசல்ட் வெளிவந்த தினத்தன்று, அண்ணாமலைக்கு மறுபடியும் போனை போட்ட பிரதமர் மோடி, ரிசல்ட் விவரங்களை கேட்டுவிட்டு சில அறிவுரைகளை கூறினாராம்.. "எப்போதுமே தனித்து போட்டியிட்டால் தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்.. அடுத்த தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டாம்.. இப்போதுள்ள நிலைமையே தொடருங்கள்.. ஆனால் எம்பி தேர்தலில் கவனம் செலுத்துங்கள்" என்றும் அறிவுறுத்தினாராம்.

 மோடி பிளான்

மோடி பிளான்

இதற்கு பிறகுதான், தமிழக பாஜக தன்னுடைய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.. அந்த வகையில் 2 கட்சிகளின் மீது கவனத்தை திருப்பி உள்ளது.. அதில் ஒன்றுதான் மதிமுக.. காரணம், சமீப காலமாகவே இங்கு அதிருப்திகள், குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.. திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் என்பதை பார்த்து, அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கும் வேலையை தமிழக பாஜக நன்றாக செய்யும்..

மதிமுக

மதிமுக

அந்த வகையில், திமுக, அதிமுகவையும் தாண்டி, இப்போது மதிமுக பக்கம் பாஜகவின் கவனம் திரும்பி உள்ளது.. மதிமுகவின் அதிருப்தியாளர்கள் சிலர், கடந்த மாதமே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இந்த விவகாரத்தில் ஸ்டாலின்தான் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டன.. அதனால்தான் பாஜக இங்கே என்ட்ரி தந்து, மதிமுகவின் அதிருப்திகளை இழுக்கும் வேலையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

 ராஜ்ய சபா தேர்தல்

ராஜ்ய சபா தேர்தல்

ராஜ்யசபா தேர்தலுக்கு முன்பு, திமுகவில் அதிருப்தியாளர்களை சேர்க்கும் முடிவை, முதல்வர் ஸ்டாலின் எடுக்கவில்லை என்றால், பாஜகவில் இணையலாம் என்று ஒருசில மதிமுக சீனியர்கள் யோசித்து வருகிறார்களாம். அதேபோல பாஜக குறி வைத்துள்ள இன்னொரு கட்சி பாமக என்கிறார்கள்.. இதற்கு காரணம், தென் மாவட்டங்களில் நாடார், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரின் ஆதரவை பாஜக ஏற்கனவே ஓரளவு பெற்றுள்ளது..

ஈர்ப்பு

ஈர்ப்பு

இத்தனை வருட காலமாக, வட மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாய மக்களின் ஆதரவை பெற்ற கட்சியாக பாமக இருந்து வந்த நிலையில், தற்போது சற்று பலவீனமாகி உள்ளது.. அந்த சமுதாய மக்களுக்கே ஒருவித ஈர்ப்பு குறைந்திருப்பதாக தெரிகிறது.. நடந்து முடிந்த தேர்தல்களில் வன்னியர்களின் ஆதரவை பாமக இழந்து வருகிறது என்பதும் நிரூபணமாகி வருகிறது.. இதைதான் பாஜக கவனித்து, இங்கும் என்ட்ரி தந்துள்ளது.. எனவே, வன்னியர்களை தங்கள் பக்கம் இழுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கான பொறுப்பு, உலகப் புகழ் பெற்ற இந்து சமய ஆன்மீக தலைவர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் பரபரக்கின்றன..

 ரகசிய ஆலோசனை

ரகசிய ஆலோசனை

அவர் சமீபத்தில் வன்னியர் சமுதாய பிரமுகர்களை, பெங்களூரு வரவழைத்து ரகசிய ஆலோசனையும் நடத்தி உள்ளார். மாஜி அமைச்சர், மாஜி எம்எல்ஏக்கள் உட்பட பல்வேறு கட்சிகளில் உள்ள வன்னியர் சமூக பிரமுகர்கள், அந்த கூட்டத்திற்கு சென்று வந்தனர்.. எனவே, விரைவில் வன்னியர் சமூக முக்கிய புள்ளிகள், பாஜகவில் இணையலாம் என்றும் சொல்கிறார்கள்.. வன்னியர் சமுதாயம் & மதிமுக என இரு தரப்புக்கும் குறி வைத்து தமிழக பாஜக நகர்ந்து வரும் நிலையில், இதனை அக்கட்சிகளின் தலைமைகள் எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பது தெரியவில்லை.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+