"கருணாநிதி".. ஒருபக்கம் ஆ.ராசா.. மறுபக்கம் நயினார்.. நடுவில் "டாக்டர்".. தமிழ்நாடை கூறுபோட முடியுமா
நயினார் நாகேந்திரன், ஆ ராசா பேசிய பேச்சு குறித்து விவாதங்கள் கிளம்பி உள்ளன
சென்னை: ஆ.ராசா தனி தமிழ்நாடு கோரிக்கையை விடுக்க, மறுபக்கம் , தமிழ்நாட்டை இரண்டாக பிரியுங்கள் என்று நயினார் நாகேந்திரன் பீதியை கிளப்ப, இரு தலைவர்களின் பேச்சும் இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
திமுகவின் மூத்த தலைவரும், எம்பியுமான ஆ.ராசா நாமக்கல்லில் 2 தினங்களுக்கு முன்பு பேசியிருந்த பேச்சு இணையத்தில் சூடுபிடித்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவும் எதிர்வினையாற்றி கொண்டிருக்கிறது.. ராசாவின் பேச்சுக்கு இதுவரை முதல்வர் ஸ்டாலின் எந்தவிதமான பதிலும், விளக்கமும், மறுப்பும் தரவில்லை.

ஆ ராசா
ராசா பேசியபோது, "தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது... ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார்.. அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று கூறியிருந்தார்.

நயினார் நாகேந்திரன்
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நெல்லையில் பாஜக சார்பாக ஆர்பாட்டம் நடந்தது.. பாஜகவின் மூத்த தலைவரும், நெல்லை எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன், "தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.. 234 தொகுதிகளில், 117- 117 ஆக பிரிப்போம். அப்போது நாங்களும் முதல்வர்களாக இரண்டு இடங்களிலும் வந்துவிடுவோம்.. தமிழகத்தின் தென் பகுதியிலும் முதல்வராக வருவோம். வட பகுதியிலும் முதல்வராக வருவோம்.. பிரதமர் மோடி நினைத்தால் இதெல்லாம் முடியும் " என்று கேட்டுக் கொண்டார்.

கமெண்ட்கள்
இந்த இரு தலைவர்களின் பேச்சுக்கள் நேற்று முதல் இணையத்தில் சூடு பிடித்துள்ளது.. இவர்கள் 2 பேர் பேசிய வீடியோக்களும் அதிகமாக ஷேர் ஆகி வருகின்றன.. இது தொடர்பான ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.. மேலும், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது என்பது சாத்தியமா? அது அவ்வளவு எளிதா? என்றும் நெட்டிசன்கள் கேட்கிறார்கள்..

நயினார் பேச்சு
நயினார் பேச்சுக்கு ஆதரவு தந்து சிலர் சொல்லும்போது, "முதலில் கொங்கு நாடு தனி மாநிலமாக கேளுங்கள்.. இந்த தமிழ்நாட்டுக்கு பெரும்பான்மை வருவாய், கொங்குவில் இருந்துதான் கிடைக்கிறது.. ஆனால், இதுவரை கொங்கு மண்டலத்துக்கு என்ன செய்திருக்கிறது இந்த அரசு? இந்த கொங்கு மண்டல, வருவாயை வைத்துதான், தருமபுரி, ஆற்காடு போன்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய மாவட்டங்கள் பலனடைகின்றன.. ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்து கொண்டால், தமிழ்நாடுதான் நிறைய வருவாய் ஈட்டுகிறது.. அதனால்தான், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்து கிடக்கின்றன.. வாழ்வாதாரத்துக்காக அவர்கள் இங்கே வந்தால், அவர்களை விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்..

கருணாநிதி
மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கரும், பீகாரில் இருந்து ஜார்கண்டும் பிரிக்கப்பட்டது... ஏற்கனவே உபியை இரண்டாக பிரித்துதான், உத்தர்காண்ட் உதயமானது.. உபியை இன்னும் 4 ஆக பிரிக்கும் யோசனையும் உள்ளது.. மாநிலங்களை பிரிப்பது என்பது வளர்ச்சிக்கான வழிமுறைதான்.. அந்த வகையில், தமிழகத்தையும் பிரிக்கலாம்.. இதை மொழி தீவிரவாதம் என்று பிரிவினைப்படுத்தி பார்க்க கூடாது.. நிர்வாக வசதி என்று பரந்த மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும்.. அன்னைக்கு கருணாநிதி, தமிழகத்தை இரண்டாக பிரித்து, அழகிரிக்கு தென்மண்டலத்தை ஒதுக்க முடிவு செய்தாரே அதெல்லாம் சரியா?" என்று கேள்வி எழுப்புகிறது ஒரு தரப்பு.

சமஸ்தானங்கள்
மற்றொரு தரப்போ, எதுக்கு இப்படி 2ஆக, 3ஆக பிரித்துக் கொண்டு? இந்தியாவை ஆங்கிலேயர் ஆக்கிரமிப்புக்கு முன்பிருந்த சமஸ்தானங்களாக பிரித்துவிட்டால் போதும்.. எல்லாமே சமமாகிவிடும்.. முதலிலே கேட்டது திராவிட நாடுதானே? தென்னிந்தியா என்றால் திராவிடம்தானே? அப்படியென்றால், தென்மாநிலங்களை ஒன்றிணைத்து திராவிட நாடு என்கிற புதிய மாநிலமாக ஆக்கிவிடுங்கள்.. திராவிடநாடு என்கிற கோரிக்கையும் நிறைவேறிவிடும் என்கிறார்கள். இப்படி இரு தரப்பிலும் வாதங்கள் வெடித்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே தமிழ்நாட்டை 3 ஆக பிரிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் - பாஜக
எனினும், தமிழ்நாட்டை 2 ஆக, 3ஆக பிரிப்பது என்பது சாத்தியமா? இந்த பேச்சு இப்போது ஏன் கிளம்புகிறது என்ற இயல்பான சந்தேகங்கள் நமக்குள் எழுகின்றன.. தமிழகத்தில் இன்னும் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் நிலவ காரணம் வட மாநிலத்தவரின் ஆதிக்கம்தான் என்ற பேச்சு பரவலாக உள்ளது.. இப்படி மாநிலங்களை பிரிப்பது என்பது ஆர்எஸ்எஸ்ஸின் இயல்பு.. இதைதான் பாஜக வடமாநிலங்களில் செய்து கொண்டிருக்கிறது.. "மாநிலம்" என்ற அந்தஸ்தை பாஜக எக்காலத்திலும் ஆதரிக்க முன்வருவதில்லை.. அதனால்தான் மாநிலங்களின் உரிமைகள் எளிதாக பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பது நடைமுறை உண்மையாக உள்ளது.

சிக்கல்கள் அதிகம்
மாநிலங்களை இப்படி கூறுபோட்டு பிரித்துவிடுவதால் என்னென்ன விளைவுகள் நடக்கும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டி உள்ளது.. முதலாவதாக, ஒரு மாநிலத்தின் அந்தஸ்து அதாவது "தாயகம்" என்பது அடியோடு நொறுக்கப்பட்டு விடும்.. இரண்டாவதாக, மாநிலங்களை பிரிப்பதால், அவை பெரும்பாலும் யூனியன் பிரதேசமாகிவிடும்.. அப்படி யூனியன் பிரதேசமாகிவிட்டால், யூனியன் பிரதேசமாக பிரித்துவிட்டால் நடைமுறை சிக்கல் மேலும், அதிகமாகும்

அபாயம் - ஆபத்து
மூன்றாவதாக, மாநில வளங்கள் அடியோடு காணாமல் போகும்.. நிர்வாக வசதிக்காக மாநிலங்களை பிரிப்பதாக சொல்லும் காரணங்களைவிட, இதெல்லாம் மிகவும் ஆபத்தான காரணங்கள். உதாரணத்துக்கு ராமதாஸ் சொல்வதுபோல, மாநிலங்களை 3 ஆகவே பிரித்து கொள்வோம்.. கண்டிப்பாக கொங்கு தனியாக பிரியும்.. அப்படி பிரிந்தால், மேற்கு மண்டலம் முழுவதும் மார்வாடிகள் கையில் போயிடும் அபாயம் உள்ளது.. இப்போதே அவர்கள்தான் அங்கு நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்..

வாக்கெடுப்புதான் சரி
பொதுவாக, குட்டி குட்டி யூனியன் பிரதேசங்களை ஒன்றிணைத்து மாநிலமாக முயற்சிக்கதான் அனைவரும் விரும்புவர்.. இதுதான் ஒரு மாநிலத்தின் சரியான வளர்ச்சியும் கூட.. ஆனால், மாநிலங்களை பிரிப்பது என்பது, வளர்ச்சியாக அமையாது.. வேண்டுமானால், அனைத்து மக்களும் இணைந்து இந்த கோரிக்கைக்காக போராட வேண்டும், அல்லது பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அந்த முடிவின்படி இதை பரிசீலிக்கலாம்.. அதற்காக தமிழ்நாட்டை மொத்தமாக இழப்பது என்பது சாத்தியமாகாது என்றே நமக்கு சொல்ல தோன்றுகிறது..!
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications