சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

+ பாயிண்ட்ஸ் 3.. மொத்த பேருக்கும் டபுள் ஷாக் தரப்போகும் எடப்பாடி.. விழித்து பார்க்கும் தலைவர்கள்

எடப்பாடிபழனிசாமிக்கு 3 சாதகமான பிளஸ் பாயிண்ட்கள் இருப்பதாக சொல்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நடக்க போகும் எம்பி தேர்தலுக்காக, அதிமுக படு ஸ்பீடில் களமிறங்கி வேலை பார்த்து வருகிறது.. அதிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு சற்று தெம்பாகவே உள்ளதாம்.. இதற்கு 3 காரணங்களும் சொல்லப்பட்டு வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. இதற்காக இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோர்ட்டில் முறையிடப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு, தான் அனுப்பும் வேட்பாளர் படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்க அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் அவசரமாக முறையீடு செய்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் தனியாக சந்தித்த எடப்பாடி.. 30 நிமிடங்கள்.. என்ன நடந்தது? ரகசியமாம்! திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் தனியாக சந்தித்த எடப்பாடி.. 30 நிமிடங்கள்.. என்ன நடந்தது? ரகசியமாம்!

 பிளஸ் பாயிண்ட்

பிளஸ் பாயிண்ட்

3 நாட்கள் தற்போது கெடு வைக்கப்பட்டுள்ளது.. இந்த கெடு முடிந்து, தேர்தல் ஆணையம் அளிக்கும் பதில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்க போகிறதா? பாதகமாக இருக்க போகிறதா? என்பதே தற்போதைய டென்ஷனாக உள்ளது.. ஒருவேளை சாதகமாக இருந்தால், அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். ஆனால், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேரடியாக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 டபுள் ஷாக்

டபுள் ஷாக்

அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் - எடப்பாடி சமர்ப்பித்துள்ள ஆவணங்களை படித்து பார்த்து, ஒரு முடிவை எடுப்பதற்கே காலதாமதம் ஆகும் என்பதால், இடைத் தேர்தல் நெருங்கும் நிலையில் 2 பேரும் போட்டியிட விரும்பினால், இரட்டை இலை சின்னத்திற்கு பதில், அவர்கள் விரும்பும் சின்னத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. மேலும், எடப்பாடி பழனிசாமியுடன் அதிக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் நிர்வாகிகள் இருந்தாலும் ஓபிஎஸ் தரப்பும் இரட்டை இலைக்கே உரிமைக் கோரிவருவதால், இந்த இடைத்தேர்தலில், சின்னம் தற்காலிகமாக பயன்பாட்டு உரிமை ரத்து செய்யப்படும் என்கிறார்கள்.

 எம்ஜிஆர் கைவண்டி

எம்ஜிஆர் கைவண்டி

அதனால், இரட்டை இலை கிடைக்காத நிலையில், தேர்தல் ஆணைய லிஸ்ட்டில் உள்ள இன்னொரு சின்னம் எதை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையும் எடப்பாடி தரப்பில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில், கைவண்டி சின்னத்தை தேர்வு செய்யலாம் என்றும் சொல்கிறார்கள்.. தொழிலாளி படத்தில் கைவண்டி இழுப்பவராக எம்ஜிஆர் நடித்திருந்த நிலையில், அந்த போட்டோவோடு, சின்னத்தையும் எளிதாக பிரபலப்படுத்திவிடலாம் என்ற ஒரு பிளானில் எடப்பாடி தரப்பு உள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில், 3 விதமான பிளஸ் பாயிண்ட்கள் தனக்கு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி மிகவும் நம்புகிறாராம்..

 B டீம்

B டீம்

முதலாவதாக, இரட்டை இலை தனக்கு கிடைத்துவிட்டால், நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதையும் நிரூபித்து காட்டி விடலாம் என்று மிகப்பெரிய நம்பிக்கையில் உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. இரண்டாவதாக, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், அதற்கு ஓபிஎஸ் தரப்பு தான் காரணம் என்றும், திமுகவின் "பி" டீமாக செயல்பட்டு கொண்டு, சொந்த கட்சிக்கும் விரோதமாக நடந்து கொண்டு, கடைசியில் சின்னத்தையே முடக்கி விட்டதாக குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்று கணக்கு போடுகிறாராம்.. இதையே பிரச்சாரமாக அதிமுக தொண்டர்களிடமும் கொண்டு சென்றால், அது தனக்கு சாதகமான முடிவை பெற்று தரும் என்றும் நம்புகிறாராம்..

 + பாயிண்ட்ஸ்

+ பாயிண்ட்ஸ்

அதேசமயம், சின்னம் கிடைத்து வெற்றி பெறுவதை காட்டிலும், சின்னமேயில்லாமல் சுயேட்சையாக போட்டியிட்டு மக்களின் ஆதரவை பெற்றால், தனிப்பெருந்தலைவராக தான் உயரலாம் என்றும் எடப்பாடி கணக்கு போட்டு கொண்டிருக்கிறாராம். அதனால், ஒவ்வொரு பூத் வாரியாக எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்? அவர்கள் என்ன சமூகத்தை சார்ந்தவர்கள்? அவர்களின் வாக்குகளை எப்படி பெறுவது என்பது குறித்து விரிவான ஆலோசனையையும் நடத்தி கொண்டிருக்கிறார். அந்த வகையில் சின்னம் கிடைத்தாலும் பிளஸ், கிடைக்காவிட்டால் இன்னும் பிளஸ் என்பதே எடப்பாடியின் தற்போதைய திட்டமாக இருக்கிறதாம்.

English summary
are these 3 things going favour edappadi Palanisamy and what OPS will do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X