சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மீன் நழுவுதே".. இதான் காரணமா.. பாஜகவின் "சதுரங்க ஆட்டம்".. டெல்லி பறந்த மேட்டர்.. எடப்பாடிக்கு பிளஸ்

இடைத்தேர்தல் குறித்து பாஜக முடிவை அறிவிக்காமல் இருப்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: வரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாஜக ஏன் இன்னும் முடிவை அறிவிக்காமல் இருக்கிறது? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.. அத்துடன் அது தொடர்பான, சில யூகங்களும், அனுமானங்களும் வலம்வர துவங்கி உள்ளன.

ஒரு கட்சி எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை இடைத்தேர்தலில் போட்டியிட்டால் தெரிந்துக் கொள்ளலாம் என பாஜக முன்னாள் தலைவர் அமித்ஷா சொல்லி வருகிறார் என்றாலும், அந்த முடிவை உடனடியாக செயல்படுத்த முடியாமல் தமிழக பாஜக உள்ளதாக தெரிகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில், களத்தில் இறங்கி போட்டியிடுவது குறித்து பாஜக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.. ஆனால், கூட்டணியில் உள்ள அதிமுகவையும், வரும் எம்பி தேர்தலையும் கணக்கில் வைத்து, அவசரப்பட்டு முடிவெடுக்காமல் தீவிர ஆலோசனையில் இறங்கி வருவதாகவும் சொல்கிறார்கள்.

என்னாது கையை வெட்டுவார்களா? கொலை செய்வார்களா? ரவுடி போல் பேசும் அமைச்சர்கள்.. பாஜக நாராயணன் தாக்கு என்னாது கையை வெட்டுவார்களா? கொலை செய்வார்களா? ரவுடி போல் பேசும் அமைச்சர்கள்.. பாஜக நாராயணன் தாக்கு

 2 டீம்கள்

2 டீம்கள்

இப்போதைக்கு கூட்டணியில் தனித்தனி நிலைப்பாடு நிலவி வருவதே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது எம்பி தேர்தலின் கூட்டணியிலும் எதிரொலிக்குமா என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது.. எனவே, இந்த இடைத்தேர்தலில், அதிமுகவின் 2 டீம்களையும் இணைத்து ஆதரவளிக்கலாம் அல்லது அவர்கள் இணையவில்லை என்றாலும் நாமே களத்தில் இறங்கி போட்டியிடலாம் அல்லது யாருக்கும் ஆதரவின்றி ஒதுங்கிவிடலாமா? என்றெல்லாம் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்... அநேமாக இன்று இரவுக்குள், தமிழக பாஜக தன்னுடைய முடிவை அறிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 அனுமானங்கள்

அனுமானங்கள்

பாஜக என்ன சொல்ல போகிறதோ? என்ற பதைபதைப்பில் ஓபிஎஸ்ஸூம் உள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் தன்னுடைய நிலைப்பாட்டை ஓபிஎஸ் நாளை அறிவிக்க போவதாக, தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. எனினும், தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துவிட்டு, பாஜக ஏன் இன்னமும் தன் முடிவை அறிவிக்கவில்லை என்ற குழப்பமும், சந்தேகமும் நிலவியபடியே உள்ளன.. இதுகுறித்த சில அனுமானங்களும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன..

 தினகரன் அதிரடி

தினகரன் அதிரடி

அதாவது, "அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக பாஜக தலைமை என்னை அழைத்தால் அப்போது அது குறித்து நான் முடிவெடுப்பேன்" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு அளிப்பேன் என்று ஓபிஎஸ்ஸும் கூறியிருந்தார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, தமாகாவுடன் மட்டும் ஆலோசனை நடத்திவிட்டு, களத்தில் போட்டியிட போவதாக அறிவித்துவிட்டாராம்.. இதுகுறித்து பாஜகவை கலந்தாலோசிக்கவில்லையாம். இதை பாஜகவில் உள்ள சில சீனியர்களே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

 சிதறும் பிம்பம்

சிதறும் பிம்பம்

ஆனால், அண்ணாமலை தரப்போ, வேறு கணக்கை போட்டு வருகிறதாம்.. இத்தனை மாத காலமாக, தமிழகத்திற்கு, பாஜகதான் எதிர்க்கட்சி என்று சொல்லி வரும்நிலையில், திமுக தற்போது முழுவீச்சில் பலத்தை காட்டி வருகிறது. இதனால், கடுமையான தோல்வியை பாஜக எதிர்கொள்ள நேர்ந்தால், எதிர்க்கட்சி என்ற பிம்பம் இப்போதே உடைந்துவிடக்கூடும்.. இதனால், எம்பி தேர்தல் சமயத்தில் சிக்கலாகும்.. அதனால் தேர்தல் வரை இந்த பிம்பத்தையே தொடர்வது என்று நினைக்கிறதாம்.. எனினும், இந்த கணக்கை திமுக சீனியர்கள் சிலர் விரும்பவில்லையாம்.

சுதீஷ்

சுதீஷ்

எடப்பாடி கண்டுகொள்ளாமல் கூட்டணியை அறிவித்துவிட்டார். ஆனாலும், ஓபிஎஸ், டிடிவி நமக்கு ஆதரவாக உள்ளபோது, வாசனும் ஆதரவு தருவார்.. இன்னும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியில் உள்ளவர்களும் ஆதரவு தருவார்கள்.. அதனால் நாம் நிச்சயமாக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்களாம்.. எனினும், தமிழக பாஜக தரப்பு இதை கண்டுகொள்ளாமல் இருக்கவே, டெல்லி மேலிடத்துக்கும் சில சீனியர்கள், தங்கள் அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்களாம்.. மேலும், நாளைய தினம் நடக்க போகும் ஆலோசனை கூட்டத்திலும், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்த போகிறார்களாம்.. எனவே, நாளைய தினம், பாஜக தலைமை தன்னுடைய நிலைப்பாட்டை நிச்சயம் அறிவிக்கும் என்றே நம்பப்படுகிறது.

 மைனஸ் பாயிண்ட்

மைனஸ் பாயிண்ட்

அதுமட்டுமல்ல, இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு யூகமான தகவல்களும் இணையத்தில் வலம்வந்தன. பாஜகவை பொறுத்தவரை, எடப்பாடி + ஓபிஎஸ் இவர்கள் 2 பேரில் யாராவது ஒருவருக்கு ஆதரவை வழங்கினாலும், அது எம்பி தேர்தல் களத்தை அசைத்து பார்த்துவிடும் என்பதால், நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துவிடலாமா என்று யோசித்து வருகிறதாம்.. ஆனால், அப்படி நடுநிலை ஆதரவை முன்னெடுப்பதும் ஒருவகையில், எடப்பாடிக்கு சாதகமான சூழலையே களத்தில் பெற்றுத்தருவதுடன், அது கண்டிப்பாக ஓபிஎஸ்ஸுக்கு மைனஸாக இருக்கும் என்கிறார்கள்.. தமிழக பாஜக நினைத்திருந்தால், என்றைக்கோ தன்னுடைய வேட்பாளரை நிறுத்தியிருக்கக்கூடும்..

 பதவி டைட்டில்

பதவி டைட்டில்

ஆனால், அப்படி எந்த முடிவையும் பாஜக எடுக்காமல் இருப்பதே, எடப்பாடிக்கான மறைமுக ஆதரவுதான் என்கிறார்கள்.. இன்னமும்கூட, "இடைக்கால பொதுச்செயலாளர்" என்று எடப்பாடியை தமிழக பாஜக தலைவர் குறிப்பிட்டு வரும்போது, ஓபிஎஸ்ஸை "ஒருங்கிணைப்பாளர்" என்று குறிப்பிட்டு பேசுவதில்லையே ஏன்? என்றும் சிலர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புகிறார்கள்.. எப்படி பார்த்தாலும், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாமல் போனால், அது எடப்பாடிக்கான ஆதரவு என்றே அர்த்தமாக கொள்ளப்படும் என்ற கணக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், சொந்த கட்சிக்குள்ளேயே சீனியர்கள் சிலர் ஆதங்கத்தில் இருப்பதாக கூறப்படுவது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டபுள் பிளான்

டபுள் பிளான்

இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி கொண்டிருக்கிறது.. இந்த 2 அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.. ஒருவேளை இரட்டை இலை சின்னம் 2 அணிகளுக்குமே கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும்...

நடுநிலை

நடுநிலை

ஆனால் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றும் அண்ணாமலை திடமாக தெரிவித்துள்ளது பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தனித்து போட்டியிடாமலும், அதே சமயத்தில் அதிமுகவை ஆதரிக்காமலும் செயல்பட பாஜக தலைவர்கள் திட்டமிட்டு உள்ளார்களாம். அதன்படி அதிமுக இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், "நடுநிலை" வகிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல, இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் நிலையில் அந்த தொகுதியில் உள்ள பாஜக தொண்டர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கவும் தமிழக பாஜகவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

English summary
Are these the issues facing Tamil nadu BJP at present and What is Annamalai going to decide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X