"சதுரங்க வேட்டை".. தூண்டிலில் சிக்கும் 2 மாஜிக்கள்.. "மேலிடம்" நாடிய எடப்பாடி.. தோதாகுமா தூது படலம்?
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தனக்கான ஆதரவை தேடும் முயற்சியில் உள்ளாராம்
சென்னை: அதிமுகவில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், தூது படலங்களும் அதிகரித்துள்ளன..!
அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. ஆனால், இந்த தீர்ப்பு வருவதற்கு எப்படியும் காலதாமதமாகும் என்கிறார்கள்..
எம்பி தேர்தல் வரை இழுபறியாகவே இழுத்து செல்லக்கூடும் என்று தெரிகிறது. எனினும், எடப்பாடியின் பிடிவாதம் திமுகவுக்கு பிளஸ் ஆகி கொண்டிருக்கிறது..

சுப்ரீம்கோர்ட்
ஒவ்வொரு முறையும், ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி என இரு தரப்புக்கும் ஆதரவுகள் கோர்ட் உத்தரவு மூலம் மாறி மாறி கிடைத்துவரும், சுப்ரீம்கோர்ட் என்ன சொல்ல போகிறது என்பதுதான், இவர்களின் வருங்கால அரசியலை தீர்மானிக்க கூடியதாக உள்ளது. இதனிடையே, ஓபிஎஸ் தன்னுடைய பலத்தை பெருக்கி கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளார்.. எடப்பாடி பழனிசாமியோ, தனக்கிருக்கும் பலத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.

சமாதான தூதுக்கள்
இதற்காக இவர்கள் இரு தரப்பிலுமே, ஒருசில விஷயங்கள் கடந்த 2, 3 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறதாம்.. அதில் முக்கியமானது "சமாதான தூது"க்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஓபிஎஸ் டீம் + எடப்பாடி டீம் பாஜக, திமுக, என எல்லா பக்கமும் இந்த தூதுக்கள் ரவுண்டி கட்டி வருகின்றன.. ஆலமரம் போன்ற அதிமுக என்ற கட்சி இன்று கண்ணெதிரே சிதைந்து கொண்டிருப்பதை பார்த்து, ரத்தத்தின் ரத்தங்கள் ரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்கள்.. இவர்கள் பஞ்சாயத்து எப்போது தீர போகிறதோ? யார் விட்டுத்தர போகிறார்களோ? என்ற கவலையும் இவர்களை சூழ்ந்துள்ளது.

தூது - 1
தேசிய கட்சிகளும் சரி, திமுக உள்ளிட்ட கட்சிகளும் சரி, எம்பி தேர்தலுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு வரும் நிலையில், அதிமுகவுக்கு சொந்த பிரச்சனையை சமாளிக்கவே நேரம் போதாமல் உள்ளது.. இப்போதிருக்கும் அரசியல் சூழலை பொறுத்தவரை, 2 பிரதான கட்சிகளை பெரிதும் நம்ப வேண்டிய நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. ஒன்று, மத்திய பாஜக, மற்றொன்று மாநில திமுக..!

தூது - 2
அந்தவகையில், பாஜகவின் ஆதரவை மறைமுகமாகவும், அபரிமிதமாகவும் பெற்றுள்ளவர் ஓபிஎஸ்.. அப்படி இருந்தும், திமுக பக்கம், கரிசனங்களை கொட்டி வருகிறார்.. அவரது மகன் ஓபிஆரும், 1000 ரூபாய் மாணவிகளுக்கு வழங்கும் திமுக அரசின் திட்டத்தையும் பாராட்டி உள்ளார்.. எனினும், எடப்பாடி பக்கமிருக்கும் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியிலும் ஓபிஎஸ் இறங்கி வருகிறார்.. இதற்கான அசைன்மென்ட், வைத்திலிங்கம், ரவீந்திரநாத், ஜெய்பிரதீப் போன்றோரிடம் தரப்பட்டுள்ளது..

தூது - 3
முக்குலத்தோர் நபர்கள் யாரும் எடப்பாடி பக்கம் இருக்கக்கூடாது, அவர்களைதான் முதலில் தங்கள் பக்கம் இழுத்து வர வேண்டும் என்பதே இவர்களின் மேஜர் அசைன்மென்ட்டாக உள்ளது. அந்தவகையில், தூதுக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல, பாஜக மேலிட ஆதரவை பெறுவதற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான 2 கொங்கு மாஜிக்கள், டெல்லிக்கு சென்றுள்ளனர்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்து எடப்பாடி மீதான நல்லெண்ணத்தையும், தற்போது கட்சிக்குள் எடப்பாடிக்கு உயர்ந்திருக்கும் செல்வாக்கு குறித்தும் விலாவரியாக எடுத்து சொல்லி உள்ளனர்..

தூது - 4
ஓபிஎஸ்ஸுக்கு ஒன்றிரண்டு பேர் மட்டுமே ஆதரவு, எடப்பாடிக்கோ 90 சதவீதம் பேர் ஆதரவாக உள்ளனர்.. தனிநீதிபதி உத்தரவு வந்தும்கூட, யாருமே ஓபிஎஸ் பக்கம் போகாமல், எடப்பாடி பக்கம் உறுதுணையாக நிற்கின்றனர் என்பதையும் எடுத்து சொல்லி உள்ளனர். இதை மேலிட தலைவர்களும் அமைதியாக கேட்டு கொண்டனராம்.. அதிமுகவின் முதுகில் ஏறி மட்டுமே, தேர்தல்களை சந்திக்கும் நிலைமையில் இருக்கும் பாஜக, அவசரப்பட்டு எடப்பாடியை பகைத்து கொள்ளவும் விரும்பாது என்கிறார்கள்..

தூது - 5
இதற்கு நடுவில், எடப்பாடி பக்கம் இருக்கு 2 முக்கிய கொங்கு புள்ளிகளுக்கு, திமுக ஸ்கெட்ச் போட்டு வருகிறதாம்.. கொங்குவை கைப்பிடிக்குள் இழுத்து பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் திமுக களமிறங்கி வரும் நிலையில், அதிமுகவின் இந்த குடுமிப்பிடி சண்டையை பார்த்த அந்த மாஜிக்களும், வெயிட்டிங் லிஸ்ட்டில் முடிவை வைத்துள்ளதாக தெரிகிறது.. மேலும் சில அதிமுக முன்னாள்கள் மீது வழக்குகள், ரெய்டுகள் உள்ளதால், அவர்களும் திமுக பக்கம் காய்களை மெல்ல நகர்த்த தொடங்கி உள்ளனராம்..

தூது - 6
அதேபோல, ஓபிஎஸ் டீமை பலப்படுத்த, 27 மாவட்ட செயலாளர்களுடன் சசிகலா மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.. இந்த பேச்சுவார்த்தை ஓரளவு சாதகமாக அமைந்தால், அடுத்து மேற்கொள்ள போகும் சுற்றுப்பயணத்தில், மேலும் சில ஆதரவாளர்களை ஓபிஎஸ் பக்கம் திரட்ட முயற்சிக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.. ஆக மொத்தம், தமிழக அரசியலில், தூது படலங்கள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன..!

டபுள் ரூட்
ஓபிஆர் அடிக்கடி திமுக அரசை விமர்சிப்பதை வைத்து, ஒருவேளை இவர் திமுக பக்கம் தாவக்கூடுமோ என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.. காரணம், அதிமுகவில் ஓபிஎஸ்ஸுக்கான வாய்ஸ் இனி குறைவு என்கிறார்கள்.. தேர்தல் ஆணையத்தை மட்டுமே இப்போதைக்கு மலை போல நம்பி உள்ளார்.. ஒருவேளை இலை கிடைக்காமல் போனால், ஒபிஎஸ் வருங்கால அரசியல் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாக நேரிடும்.. அதனாலேயே திமுக பக்கம், அல்லது பாஜக பக்கம், என 2 ரூட்டுகளிலுமே நிதானமாக பயணித்து வருகிறாராம் ஓபிஎஸ் & ஓபிஆர்.. இந்த கட்சியில் இவர்கள் எந்த பக்கம் தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications