தங்கம் அடகு வைக்க போறீங்களா? மறைந்து இருக்கும் பெரிய ரிஸ்க்.. இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: தங்கத்தை அடகு வைத்து லோன் எடுப்பது இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆர்பிஐ ரிப்போர்ட்டுகள் பல தங்கம் அடகு வைப்பது உயர்ந்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.
தங்க லோன் என்பது எளிதான, வேகமான லோன் முறையாகும். நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலில், நடுத்தர வர்க்கத்தின் ஆபத்பாந்தவனாகத் தெரிவது 'தங்கக் கடன்' (Gold Loan) தான். "கையில நகையோடு போங்க... பத்தே நிமிஷத்துல பணத்தோடு வாங்க!" என்கிற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் நம்மைச் சுண்டி இழுக்கும். ஆனால், காகித வேலைகள் இல்லை, குறைந்த வட்டி என்ற பிம்பங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கசப்பான உண்மைகள் குறித்து ஒரு அலசல்.

குறைந்த வட்டி என்பது மாயையா?
நகைக்கடன்கள், கிரெடிட் கார்டு அல்லது தனிநபர் கடன்களை விட மலிவானதாகத் தோன்றலாம். ஆனால், விளம்பரம் செய்யப்படும் வட்டி விகிதம் மட்டுமே உங்கள் மொத்தச் செலவு அல்ல.
மறைமுகக் கட்டணங்கள்: கடனைச் செயலாக்க 'புராசஸிங் ஃபீ' (Processing Fees), நகையின் தரத்தைச் சரிபார்க்க 'மதிப்பீட்டுக் கட்டணம்' (Valuation Charges) எனப் பல சிறு கட்டணங்கள் உங்கள் கணக்கில் கழியும்.
கூட்டு வட்டி ஆபத்து: சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வட்டியைப் போடும் முறை முற்றிலும் மாறுபட்டது. சில இடங்களில் வட்டி 'கூட்டு வட்டி' (Compounding Interest) அடிப்படையில் கணக்கிடப்படுவதால், முதிர்வு காலத்தில் நீங்கள் கட்ட வேண்டிய தொகை மலைக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும்.
ஏல அபாயமும்... பாரம்பரிய இழப்பும்!
நகைக்கடனைப் பொறுத்தவரை இ.எம்.ஐ (EMI) முறை எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. பல நிறுவனங்களில், வட்டியைக் கட்டிக்கொண்டே வந்து இறுதியில் அசல் முழுவதையும் ஒரே தவணையாகக் கட்டும் முறையே நடைமுறையில் உள்ளது.
எச்சரிக்கை: கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், எவ்விதத் தயக்கமும் இன்றி உங்கள் நகையை ஏலம் விட நிதி நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு. ஏலத்திற்குப் பிறகு மீதித் தொகை உங்களுக்குக் கிடைத்தாலும், உங்கள் குடும்பத்தின் தலைமுறை அடையாளமான, சென்டிமென்ட் மதிப்புமிக்க நகைகளை நீங்கள் நிரந்தரமாக இழக்க நேரிடும்.
மார்க்கெட் விலை சரிந்தால் என்னவாகும்?
ரிசர்வ் வங்கி (RBI) விதிகளின்படி, நகையின் மதிப்பில் அதிகபட்சமாக 75% மட்டுமே கடனாகப் பெற முடியும். இது பலருக்குத் தெரியும். ஆனால், தெரியாத ஒன்று 'எல்.டி.வி' (LTV - Loan to Value) சரிவு.
கூடுதல் தங்கம் தேவை: சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தால், நீங்கள் அடகு வைத்த நகையின் மதிப்பு குறையும். அந்தச் சமயத்தில், வங்கி உங்களை அழைத்து, "கூடுதல் நகையை அடகு வையுங்கள்" என்றோ அல்லது "கடன்தொகையை உடனடியாகக் குறையுங்கள்" என்றோ கட்டாயப்படுத்தும். இதைச் செய்யத் தவறினால், உங்கள் நகை உடனடியாக ஏலத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது.
அவசரத் தேவைக்குத் தங்கத்தை அடகு வைப்பது தவறில்லை. ஆனால், வட்டி கணக்கிடும் முறை, மறைமுகக் கட்டணங்கள் மற்றும் முதிர்வு கால நிபந்தனைகளைத் தீர விசாரித்த பிறகு கையெழுத்திடுங்கள். இல்லையெனில், 'மஞ்சள் உலோகம்' உங்கள் நிம்மதியைப் பறிக்கும் 'சிவப்பு எச்சரிக்கை'யாகிவிடும்!
-
தங்க விலை 16 வருடத்தில் மிக பெரிய சரிவு! அடுத்து என்ன நடக்கும்? முதலீட்டாளர்களுக்கு மேஜர் எச்சரிக்கை -
Gold Price: உச்சானிக் கொம்பில் இருந்து விழுந்த தங்கம்.. பணத்தை ரெடி பண்ணுங்க.. என்ட்ரி பாயின்ட் வருது -
வெள்ளி விலை 2 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா..? நிபுணர்கள் அடித்து சொல்லும் முக்கிய விஷயம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications