பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது?
சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கி சிபிஐ அதிகாரிகள் மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று சொல்கிறார்கள். ஆனால் சிபிஐ தரப்பு இதை உறுதிபடுத்தவில்லை.
வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த கைது சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கல்லூரி மாணவிகள் சிலர், சில கயவர்களிடம் சிக்கி கதறி அழும் வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கல்லூரி மாணவி
சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அருளானந்தம் கைது
பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

விசாரணைக்கு பின் கைது
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் மேலும் ஒருவரை கைதுசெய்ததாக தகவல்கள் வெளியானது. . இவர் ஏற்கனவே காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று சொல்லப்பட்டது, ஆனால் இதை சிபிஐ உறுதிபடுத்தவில்லை.

சிபிஐ அதிரடி
அண்மையில் பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடைய அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, குற்றம் சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டார். இந்த சூழலில் தான் அருண் குமார் என்பவர் புதிதாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications