அசானி புயல் தாக்கம்...சென்னையில் இருந்து புறப்படும் 17 விமானங்கள் இன்று ரத்து
அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அசானி புயல் காரணமாகசென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த அசானி தீவிர புயலானது, புயலாக வலுவிழந்தது. நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அசானி புயல் இன்று ஆந்திர கடலோர மாவட்டங்களை தக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஆந்திராவின் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசானி புயல் காரணமாக சென்னைக்கு வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அசானி கொடுத்த மழை
அசானி புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை புரசைவாக்கம், சேப்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை, கிண்டி, எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு, நுங்ககம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

13 மாவட்டங்களில் கனமழை
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் ஒரு சில இடங்களில் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 விமானங்கள் ரத்து
அசானி புயல் காரணமாக நேற்று சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இன்று அசானி புயல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 8 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ஆகும். 9 விமானங்கள் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் ஆகும்.
Recommended Video

விசாகப்பட்டினம் துறைமுகம் மூடல்
விசாகப்பட்டினம் விமானங்கள் 6, விஜயவாடா 4 விமானங்களும், ஹைதராபாத் 2 விமானங்களும், ராஜமுந்திரி 2 விமானங்களும்,பெங்களூா், ஜெய்ப்பூர், கொல்கத்தா தலா ஒரு விமானங்கள் வீதம் மொத்தம் 17 விமானங்கள் ரத்து என்று இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அசானி புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் துறைமுகம் மூடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications