Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி ஆட்டம் “ஸ்டார்ட்”.. பன்னீருக்கு “கிரீன் சிக்னல்”.. எடப்பாடி “ரெட்”! இரட்டை இலை முடக்கமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக உட்கட்சி மோதல் விவகாரத்தில் டெல்லியின் ஆதரவு ஓபிஎஸ் பக்கம் இருப்பதாகவும், விரைவில் அவர் பக்கம் நிர்வாகிகள் தாவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் அதிமுகவை முன்னாள் ஐடி அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். இதனை தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முழுமையாக மகுடம் சூட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் வேகமாக காய்களை நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் வைத்த செக்

ஓபிஎஸ் வைத்த செக்

ஆனால், பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான உச்சநீதிமன்ற படியேறினார் ஓ.பன்னீர்செல்வம். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

டெல்லி கணக்கு

டெல்லி கணக்கு

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு நம்பிக்கை எழவே அடுத்தடுத்த வேலைகளில் இறங்கி இருக்கின்றனர். குறிப்பாக டெல்லியின் ஆதரவு தனக்கே இருப்பதாக கூறி ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த சூழலில் அவரது அணிக்கு தாவவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.

மைத்ரேயன்

மைத்ரேயன்

அந்த வகையில் நேற்றுவரை எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவாக இருந்த அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவி இருக்கிறார். இதனை தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் 2017 ஆம் ஆண்டு தர்மயுத்தத்தை தொடங்கியபோது அவரோடு இருந்தவர் மைத்ரேயன். கடந்த ஜூன் மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டபோதும் ஓபிஎஸ் அணியிலேயே இருந்தார் மைத்ரேயன்.

அஸ்பயர் சுவாமிநாதன்

அஸ்பயர் சுவாமிநாதன்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஸ்பயர் சுவாமிநாதன், "கிரீன் சிக்னல் கொடுத்த டெல்லி! மீண்டும் ஓபிஎஸிடம் வந்த மைத்திரேயரன்! தொடர்ந்து ஓபிஎஸிடம் வர காத்திருக்கும் முக்கிய தலைவர்கள். விரைவில் ஒரு இடைத்தேர்தல், சின்னம் முடக்கம்! இதை காணப் போகிறோம் விரைவில்.... காத்திருப்போம் மேலும் சுவாரசியமான பல திருப்பங்களுக்கு!" என்று பதிவிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+