Personal Loan: பெர்சனல் லோன் வாங்கியவர் இறந்துவிட்டால்.. கடனை வங்கிகள் எப்படி வசூலிக்கும்.. வாரிசுகள் கட்ட வேண்டுமா?
சென்னை: வங்கிகளில் பெர்சனல் லோன் (Personal Loan) வாங்கியவர்கள் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், அந்த கடனை அடுத்து யார் செலுத்த வேண்டும்.. வாரிசுதாரர்கள் கட்ட வேண்டுமா? அல்லது கேரண்டி கையெழுத்து போட்டவர்கள் பொறுப்பாவாரா? என்பது பற்றியும் இதுபோன்ற சிக்கலான நேரங்களில் வங்கிகள் கடனை எப்படி வசூல் செய்கின்றன என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பொதுமக்கள் தங்களின் எதிர்பாராத செலவுகளை ஈடுகட்டவும், வீடு, கார் உள்ளிட்டவை வாங்கவும் வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். வங்கிகளில் நகைக்கடன், வீட்டுக்கடன், கார் லோன், பெர்சனல் லோன் என பல்வேறு கடன் திட்டங்கள் உள்ளன. இவற்றில் நகை கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றிற்கு எல்லாம் உரிய அடமானம் பிடித்து விடுகிறார்கள்.

லோன் வாங்கியவர் இறந்துவிட்டால்
லோன்களை கட்ட தவறினால், உரிய சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்றவற்றில் வங்கிகள் ஈடுபட்டு கடனை சமாளித்து வருகின்றன. அதேநேரத்தில் தனிநபர் கடன்களுக்கு எந்த ஒரு செக்யூரிட்டியாக எந்த அடமானமும் கோரப்படுவது இல்லை.
எனவே, எதிர்பாராதவிதமாக வங்கியில் பெர்சனல் லோன் வாங்கியவர் இறந்துவிட்டால் வங்கிகளுக்கு அதை ஈடுகட்ட எந்த ஒரு அடமானமும் இருக்காது. அப்படியான நேரத்தில் வங்கிகள் கடனை வசூலிக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கின்றன என்பது தெரியுமா உங்களுக்கு? இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
எந்த சிரமத்தையும் கொடுக்காது
வங்கிகளில் பெர்சனல் லோன் வாங்கியவர் திடீரென இறந்துவிட்டால், வங்கிகள் முதல் வேளையாக லோன் பாதுகாப்பிற்காக இன்சூரன்ஸ் பாலிசி எதுவும் போட்டுள்ளாரா என்று சரிபார்க்கும். அப்படியான இன்சூரன்ஸ் போட்டு இருந்தால், வங்கிகள் காப்பீட்டு நிறுவனத்திடம் இது பற்றி முறையீட்டு கடன் தொகையை ஈடுகட்டி விடும்.
இந்த நடைமுறையானது உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கோ, கேரண்டி கையெழுத்து போட்டவருக்கோ எந்த சிரமத்தையும் கொடுக்காது. ஒருவேளை இன்சூரன்ஸ் கவரேஜ் இல்லையென்றால், வங்கிகள் கடனுக்கு இணை விண்ணப்பதாரரோ அல்லது உத்தரவாதம் அளித்தவர் இருக்கிறாரா என்று ஆய்வு செய்யும்.
இருவரின் சட்டப்பூர்வ கடமை
கடனின் இணை விண்ணப்பதாரர் (co-applicant) திருப்பி செலுத்துவதற்கு பொறுப்பாவார். கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ கேரண்டி கொடுத்தவர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். கடன் பாக்கியை தீர்த்து வைப்பது இருவரின் சட்டப்பூர்வ கடமையாகும்.
இதை செய்யத் தவறினால், வங்கிகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும். அவர்களின் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும். ஒருவேளை co-applicant அல்லது கேரண்டர் இல்லையென்றால், உயிரிழந்தவரின் சொத்துகளில் இருந்து வங்கிகள் நிலுவைத் தொகையை வசூலிக்க கூடும்.
சேமிப்பு கணக்கு தொகை, நிரந்தர வைப்பு தொகை, முதலீடுகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற பிற நிதி சொத்துக்களை ஆய்வு செய்யும். ஒருவேளை இந்த சொத்து போதுமானதாக இல்லையென்றால், ஏதாவது ஆயுள் காப்பீடு உள்ளதா என்று வங்கிகள் ஆய்வு செய்யும்.
வாரிசுகள் செலுத்த வேண்டுமா?
தனிநபர் கடன்களுக்கு வாரிசுகள் தானாக பொறுப்பாக மாட்டார்கள். அதாவது இணை விண்ணப்பதாரரோ, உத்தரவாதம் அளிப்பவரோ இருந்தால் வாரிசுகள் பொறுப்பு இல்லை. எனவே, வாரிசுதாரர்கள் கடன் ஒப்பந்தத்தில் வாரிசுதாரர்களுக்கு ஏதேனும் பொறுப்பு தெரிவித்து இருக்கிறார்களா என்று உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
அப்படியான நிபந்தனை எதுவும் கடன் ஒப்பந்தத்தில் இல்லையென்றால், வங்கிகள் கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், வாரிசுகள் கடன் வாங்கியவரிடமிருந்து சொத்துகளை பெற்று இருந்தால், கடன் வழங்கிய நிறுவனங்கள் கடனுக்கு ஈடான தொகையை அந்த சொத்துகளில் இருந்து வசூலிக்கலாம்.
வங்கிகள் எப்போது கடனை ரைட் ஆஃப் செய்யும்?
அரிதான சூழல்களில், அதாவது இன்சூரன்ஸ், உத்தரவாதம் அளித்தவர்கள் இல்லை, சொத்துக்கள் எதுவும் இல்லை போன்ற சூழல் இருந்தால் மட்டுமே அந்த கடனை வங்கிகள் தள்ளுபடி (write off) செய்யும். கடன் வாங்கியவர் இறந்தால், வங்கியிடம் உடனடியாக குடும்பத்தினர் தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சட்ட ரீதியாக பிரச்சினை எழாமல் இருக்க உரிய சட்ட ஆலோசனைகளை பெறுவது நல்லது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications