Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைஃபை கார்டு .. 'இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லேயே இருக்கலாம்.. கவனம் மக்களே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பின் நம்பர் இல்லாத வைஃபை கார்டுகளை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த கார்டுகள் மூலம் பணம் எடுக்க பின் நம்பர் தேவை இல்லை. ஒரு நாளில் 25 ஆயிரம் வரை ஐந்தாயிரம், ஐந்தாயிரமாக எடுக்க முடியும் என்பதால் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

எஸ்பிஐ, கனரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட அனைத்து பொதுத் துறை வங்கிகளும் , ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, சிட்டி யூனியன் உள்பட அனைத்து தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர் ஈர்ப்பதற்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன

அப்படி செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் 'கான்டக்ட்லெஸ் கார்டு' எனப்படும் வைஃபை கார்டுகள் திட்டம். இது புதிய திட்டம் அல்ல. கடந்த
கடந்த 2015-ம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. ஆனால் இந்த வகை கார்டுகளால் இப்போது பிரச்சனை அதிகரித்து வருகிறது. பலரது பணம் திருடப்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்று வங்கி அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்

பின் நம்பர் தேவையில்லை

பின் நம்பர் தேவையில்லை

கான்டக்ட்லெஸ் கார்டு என்றால் என்ன? இது எப்போது அறிமுகம் ஆனது என்பதை இப்போது பார்ப்போம். வாடிக்கையாளர்கள் பொதுவாக செலவு செய்ய கார்டுடன் சென்றால் பின் நம்பர் தேவையாக இருந்தது. பின் நம்பர் இல்லாமலேயே பணம் எடுக்க அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன்படி வழங்கப்பட்ட கார்டு தான் கான்டக்ட்லெஸ் கார்டு. தொடர்பு இல்லாத பரிவர்த்தனைக்கான கார்டு ஆகும்.

5000 பணம்

5000 பணம்

வைஃபை கார்டுக்கான கடன் பெறும் அளவு ரூ.2 ஆயிரம் ஆக இருந்தது. இந்த ஆண்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமான ஏடிஎம் கார்டுபோல, இந்த கார்டுகளை ஸ்வைப்பிங் இயந்திரத்தில் தேய்க்க தேவையில்லை. அத்துடன், பின் நம்பர் எனப்படும் ரகசிய குறியீட்டு எண்ணையும் பதிய வேண்டியது இல்லை. ஸ்வைப்பிங் இயந்திரம் முன்பு கார்டை காட்டினாலே, பணம் கழிந்துவிடும். இந்த கார்டு 2015ம் ஆண்டிலேயே அறிமுகம் ஆகிவிட்டது. ஆனால் இப்போது தான் மக்களிடம் பிரபலம் ஆகி உள்ளது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

வாடிக்கையாளர்களுக்கு டெபிட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான கார்டுகளையும் வைஃபை கார்டுகளாக வழங்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட போது, இந்த கார்டுகளை எவ்வாறு பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வகுத்து அறிவித்து இருந்தது. தற்போது வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்கும் நிலை அதிகரித்துள்ளால் அந்த விதிமுறைகளை வெளியிட்டு வங்கிகள் விழிப்புணர்வு செய்து வருகின்றன.

திருட்டு

திருட்டு

சரி வைஃபை கார்டுகளால் என்ன சிக்கல் உள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி தலா ரூ.5 ஆயிரம் வீதம் 5 முறை என ஒரு நாளில் ரூ.25 ஆயிரம் வரை பொருட்களை வாங்க முடியும். எனவே, இந்த வைஃபை கார்டு தொலைந்து போனாலோ, திருடு போனாலோ அதை எடுத்த நபர் அடுத்த சில நிமிடத்துக்குள் ரூ.25 ஆயிரத்துக்கு கடைகளில் பொருட்களை வாங்க முடியும் என்துடன் கார்டுகளுக்கு பின் நம்பர் கிடையாது என்பது, திருடர்களுக்கு வசதியாக அமைந்துள்ளது.

எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ்


வைஃபை கார்டுளை எப்படி பயன்படுத்தினால் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை பார்ப்போம். வைஃபை கார்டை அதிக கவனத்துடன் பயன்படுத்துவது அவசியம். ஓட்டல், கடைகளில் பயன்படுத்தும்போது, கார்டை கடைக்காரரிடம் கொடுப்பதற்கு பதிலாக ஸ்வைப்பிங் இயந்திரத்தில் நாமே நேரடியாக பயன்படுத்த வேண்டும். அத்துடன், பயன்படுத்திய பிறகு, பதிவு செய்யப்பட்ட நமது செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ்சை பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஸ்வைப்பிங் கருவி

ஸ்வைப்பிங் கருவி

எப்படி பாதுகாப்பாக வைஃபை கார்டுகளை வைத்துக் கொள்வது? வைஃபை கார்டுகளை பர்ஸில் வைக்கும்போது, அலுமினிய ஃபாயில் காகிதத்தில் மூடி வைக்க வேண்டும். அல்லது அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்ட ஆர்எஃப்ஐடி எனப்படும் கவர்களில் போட்டு வைக்க வேண்டும். இதன்மூலம், நமது பர்ஸ் அருகே ஸ்வைப்பிங் கருவியை கொண்டு வந்தாலும் பணம் எடுப்பதை தடுக்க முடியும்.

வேண்டாம்

வேண்டாம்

வைஃபை கார்டுகளை பாதுகாப்பாக பயன்படுத்தக் கூடியவர்கள் மட்டுமே இத்தகைய கார்டுகளை பயன்படுத்துவது நல்லது. முடியாதவர்கள் வழக்கமான பின் நம்பர் மூலம் இயக்கப்படும் கார்டுகளையே பயன்படுத்துவது நல்லது. இறுதியாக சொல்ல வருவது... நமக்கு ஏன் வேண்டாத ரிஸ்க்.. நமக்கு செட்டாகவிட்டால் இந்த கார்டை வேண்டாம் என்று சொல்லி பின்போட்டு பயன்படுத்தும் கார்டுகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு முதலில் உங்கள் டெபிட் அல்லது கிரிடிட் கார்டு வைபை கார்டா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களால் இந்த கார்டை பாதுகாப்பாக வைக்க முடியாது என்றால், இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லேயே இருக்கலாம் என்பதுபோல் வைஃபை கார்டை வாங்கி வைத்துக்கொள்வதை விட வாங்காமல் இருப்பதே நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+