கேலி வேண்டாம்..பொதுமக்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள்..காவலர்களுக்கு டிஜிபி அறிவுரை
சென்னை: காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பொதுமக்களிடம் காவலர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுரை வழங்கினார். அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற இறுமாப்புடன் சில காவலர்கள் நடந்து கொள்வதாக டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லாக்கப் மரணம், பொதுமக்களை போலீசார் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது, பொதுமக்களிடையே காவல்துறையினர் மீதான நல்லெண்ணத்தைச் சிதைப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் கோவை நீலாம்பூர் பகுதியில் போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் மோகனசுந்தரம் என்பவரை தாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியதை அடுத்து அந்த அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அடிக்க கூடாது
சட்டம் ஒழுங்கு புகார்கள் தொடந்து வரும் நிலையில், காவல்துறையினர் ஒருசிலரின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த காவல்துறையினர் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும், இனி யாரையும் துன்புறுத்தவோ தாக்கவோ கூடாது என்றும் கடந்த ஜூன் போலீசாருக்கு கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார் டிஜிபி சைலேந்திரபாபு.

ஒழுங்கு நடவடிக்கை
பொதுமக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு போலீஸ்காரரும் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். எவரையும் அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது. கோவை சம்பவம் கடைசியாக இருக்கட்டும். இனி சட்டத்தை மீறி செயல்படும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனக் கடுமையாக எச்சரித்தார்.

கன்னியம் தேவை
இந்த நிலையில் இன்றைய தினம் டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,காவலர்கள் புகார் கொடுக்க வருபவரை எப்படி நடத்த வேண்டும் எனவும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொது மக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வருவோரை கேலி செய்வதோ, துன்புறுத்துவதோ கூடாது. அது காவல்துறைக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் விதமாக அமையும்.

இறுமாப்பு கூடாது
காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற இறுமாப்புடன் சில காவலர்கள் நடந்து கொள்கிறார்கள். அந்த எண்ணம் இருக்கவே கூடாது என்று அனைத்து காவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications