சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடாதீங்க.. ஆக்‌ஷனில் குதித்த டீம்.. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

தமிழக காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு என்ன

Google Oneindia Tamil News

சென்னை: குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் தனியார் லாட்ஜ்களில் சோதனை நடத்தி பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆவண ஆய்வு செய்ய வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து, ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.

உடனடியாக சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதாகினர்.. இந்த வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பாக பணி புரிந்த காவலர்களை அங்கீகரிக்கும் விதமாக 15 பேருக்கு சான்றிதழும் வெகுமதியும் வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

தேவர் குரு பூஜை.. வரலாற்றில் முதல் முறையாக.. டிஜிபி அலுவலகத்திலிருந்து போலீஸாருக்கு கடிதம்! தேவர் குரு பூஜை.. வரலாற்றில் முதல் முறையாக.. டிஜிபி அலுவலகத்திலிருந்து போலீஸாருக்கு கடிதம்!

 34 பேர்

34 பேர்

அதேபோல, கார் வெடித்த சம்பவத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு 34 பேருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினர். எனினும், இந்த வெடிவிபத்து சம்பவம் அரசியல் அதிர்வுகளை உண்டுபண்ணி வருகிறது.. மாநில அரசுக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகளை கேட்டு, இது தொடர்பான விமர்சனத்தையும் முன்வைத்து வருகிறது.. காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய அண்ணாமலை, தற்போது இதே காவல்துறையின் செயல்பாட்டை பாராட்டியும் வருகிறார்.

 உச்சக்கட்ட அலர்ட்

உச்சக்கட்ட அலர்ட்

எனினும், கோவை வெடிவிபத்து சம்பவத்துக்கு பிறகு தமிழக காவல்துறை உச்சக்கட்ட அலர்ட் ஆகியுள்ளது.. அந்தவகையில், போலீசாரின் மொத்த கவனமும் சமூகவிரோத செயல்களை முறியடிப்பதில் திரும்பியிருக்கிறது.. மற்றொருபக்கம் உளவுத்துறையும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.. மேலும், அன்றாட பணிகளில் மாற்றம் செய்வது குறித்தும் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்..

லாட்ஜ்கள்

லாட்ஜ்கள்

இதைதவிர, மாநிலம் முழுவதும் மர்மநபர்களின் நடமாட்டம் குற்றத்தடுப்பு தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கத்தினரிடன் போலீசார் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அந்த ஆலோசனையில் ஒருசில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாம்.. குறிப்பாக, குற்றத்தடுப்பின் ஒரு அங்கமாக, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் லாட்ஜ்களிலும் போலீசார் தொடர் சோதனை நடத்த முடிவாகி உள்ளது..

 டவுட் நபர்கள்

டவுட் நபர்கள்

தினமும் இந்த சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், அந்த சோதனையில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளாராம்.. தனியார் லாட்ஜ்களில் சோதனை மேற்கொள்ளும்போது, அங்கு வருகை பதிவேடு, தங்கு நபர்களின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா? சந்தேக நபர்கள் தங்கியிருந்தால் அவர்களை உரிய முறையில் விசாரிக்க வேண்டும், சிசிடிவி கேமராக்கள் தடையின்றி இயங்குகிறதா என்பதையெல்லாம் உறுதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Big instruction given by DGP sylendra babu and Whats the order issued as a crime prevention measure
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X