சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சல்லி சல்லியா போச்சே.. ஆட்டத்தை கலைத்து ஆடும் "ராஜா".. யார் அந்த "புதுவரவு".. எடப்பாடி கனவு தகருமா?

அன்வர் ராஜா விரைவில் ஓபிஎஸ் பக்கம் தாவப்போவதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுக்கு மீண்டும் ஒரு முக்கிய தலைவர் வரப்போகிறார்.. ஆனால், அவர் எடப்பாடி பக்கம் போவாரா? அல்லது ஓபிஎஸ் டீம் பக்கம் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

அன்வர்ராஜாவை பொறுத்தவரை, அதிமுகவின் மூத்த தலைவர்.. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி என 3 ஆட்சி தலைவர்களிடமும் பொறுப்பில் இருந்தவர்.. பல சமயங்களில் இவரது துணிச்சல் பேச்சு அபாரமானவை!

ஆரம்பத்தில் எம்ஜிஆரின் மறைவு பிறகு அதிமுக உடைந்தபோது, ஜானகி அணி பக்கம் நின்றவர்.. பலமுறை அன்வர்ராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

எந்த அளவுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டாரோ, அந்த அளவுக்கு கட்சிக்குள் இணைத்துக் கொள்ளப்படவும் செய்தார்.. 2014 எம்பி தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அன்வர் ராஜா.

அதிமுகவில் மீண்டும் இணையும் 'மாஜி’ அன்வர் ராஜா.. யார் பக்கம்? சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா? அதிமுகவில் மீண்டும் இணையும் 'மாஜி’ அன்வர் ராஜா.. யார் பக்கம்? சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா?

 கடுப்பு பாஜக

கடுப்பு பாஜக

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நின்றார்.. இப்படி மாறி மாறி தாவிக் கொண்டிருந்தது, அவர்மீதான நம்பிக்கையை தொண்டர்களிடம் குறைக்க செய்தது. இன்னொரு பக்கம், அதிமுக - பாஜக கூட்டணியை மிக கடுமையாக விமர்சித்தார்.. முத்தலாக் சட்டத்தை கண்டித்து அன்றைய தினம், அன்வர்ராஜா பேசிய பேச்சுக்களை டெல்லி பாஜக உற்றுநோக்கவே செய்தது.. இதையடுத்து, 2021 தேர்தலில் அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை...

 அன்வர் ராஜா

அன்வர் ராஜா

இந்த அதிருப்தியில் அன்வர்ராஜா சிக்கியிருந்த நிலையில்தான், திடீரென அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது என்ற கோரிக்கையை ஓபனாக போட்டுடைத்தார். அதுமட்டுமல்ல, அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது. வலுப்படுத்த சின்னம்மா வர வேண்டும்" என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதையடுத்து, கட்சியில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார்.. ஆனால் இந்த நீக்கத்தின் பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருக்கிறது என்றார்கள் சிலர்..

 சத்தத்தை காணோம்

சத்தத்தை காணோம்

மேலும் சிலரோ, சசிகலாவை ஆதரித்ததால்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றார்கள்.. தனிப்பட்ட முறையில் தன்னை தாக்கிய கோபம் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தாலும், முன்னாள் அமைச்சர்களின் அழுத்தமும் அன்வர் ராஜாவை நீக்க காரணமாக இருக்கும் என்றார்கள். ஆக மொத்தம், அன்வர் ராஜா பதவி நீக்கம் என்பது நீண்ட நாட்களுக்கு ஒரு விவாதமாகவே நடந்து கொண்டிருந்தது. அதற்கு பிறகு, அன்வர் ராஜாவிடமிருந்து சத்தத்தையே காணோம்.. அவரது மவுனம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது..

 ராஜ கண்ணப்பன்

ராஜ கண்ணப்பன்

கட்சியில் இருந்து இவர் நீக்கப்பட்டதுமே, சசிகலாவை சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. பிறகு திமுக பக்கம் செல்வார் என்று முணுமுணுக்கப்பட்டது.. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.. எனினும், அன்வர்ராஜாவை திமுக பக்கம் இவரை இழுக்க தூது படலங்கள் ஆரம்பித்ததாகவும், அதற்கான அசைன்மென்ட்டை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் தரப்பட்டதாகவும் கூட சொல்லப்பட்டது.. இவ்வளவும் நடந்து கொண்டிருந்தாலும் அன்வர் ராஜாவை பற்றின எந்த தகவல் நீண்டகாலமாகவே வெளிவரவில்லை..

 அங்கேயே இருங்க..

அங்கேயே இருங்க..

செய்தியாளர்களையும் அவர் சந்திக்கவில்லை.. ஆனால், சசிகலாவை அன்வர் ராஜா சந்தித்ததாக தகவல்கள் லேசாக கசிந்தன.. நிறைய அரசியல் விவகாரங்களை பேசிய அன்வர், "வெளிப்படையாக உங்களோடு இணைந்து அரசியல் செய்ய வந்து விடுகிறேன் அம்மா " என்று சொன்னாராம்.. ஆனால் சசிகலாவோ, "நீங்க ஏன் இங்கு வரணும்? அங்கேயே இருங்க. நான் அங்கு வந்துவிடுவேன்" என்றாராம்.. அதற்கு பிறகு சசிகலாவுக்கும் ஓபனாக ஆதரவு தரவில்லை.. எடப்பாடி, ஓபிஎஸ் என இருவருக்கும் ஆதரவு தரவில்லை.,. தனியாக ஒதுங்கியிருந்த நிலையில்தான், இப்போது திடீரென சீனில் என்ட்ரி தந்துள்ளார் அன்வர் ராஜா.

அவதாரம்

அவதாரம்

செய்தியாளர்களிடம் சந்தித்து பேசும்போது, "அதிமுக எழுச்சியுடன் மறுபடியும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். எடப்பாடி - ஓபிஎஸ் இணைந்திருந்தபோது என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். மறுபடியும் இணைந்தால் தான் என்னை கட்சியில் சேர்க்க முடியும்... கட்சியில் இணைவதற்காக காத்திருக்கிறேன். அதிமுகவினரை இணைக்கவும் தயாராக இருக்கிறேன்.. அதில் இணையவும் காத்திருக்கிறேன்.. அதிமுக நிறுவன தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். ஒரு அவதாரம். அவரின் பக்தனாக தொடர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

 2 மேட்டர்கள்

2 மேட்டர்கள்

இப்படி பொதுவாக அதிமுக என்று சொன்னாரே தவிர, எடப்பாடி அணியா? ஓபிஎஸ் அணியா? எந்த பக்கம் போக போகிறார் என்று சொல்லவில்லை.. சசிகலா பற்றின பேச்சையும் எடுக்கவில்லை.. அநேகமாக அன்வர் ராஜா ஓபிஎஸ் பக்கம் தாவக்கூடும் என்கிறார்கள்.. இதற்கு 2 காரணங்களும் சொல்லப்படுகின்றன.. அன்வர்ராஜாவை பொறுத்தவரை, அன்றே சசிகலா தலைமையைதான் கோரிக்கையாக வைத்தார்.. அதற்காகவே கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டதால், இவர்மீதான கோபம் எடப்பாடிக்கு நிறையவே உள்ளதாம்..

 போனை போட்ட ஓபிஎஸ்

போனை போட்ட ஓபிஎஸ்

ஆனால், சசிகலா ஆதரவை ஏற்பதாக ஓபிஎஸ் பலமுறை சொல்லிவரும் நிலையில், அன்வர் ராஜா ஓபிஎஸ் பக்கமே நிற்கக்கூடும் என தெரிகிறது. அதுமட்டுமல்ல, அதிருப்தியாளர்களுக்கு போனை போட்டு ஓபிஎஸ் கடந்த 2 நாட்களாக பேசி, தன் அணிக்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.. அந்த லிஸ்ட்டில் அன்வர் ராஜாவும் இருக்கலாம் என்கிறார்கள்.. ஆகமொத்தம், அன்வர்ராஜா கடைசியில் யாரிடம்தான் செல்ல போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்..!

English summary
BIG Leader may join in OPS Team soon and what will Edapadi Palanisamy do the next அன்வர் ராஜா விரைவில் ஓபிஎஸ் பக்கம் தாவப்போவதாக கூறப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X