பாஜக, அதிமுக பிளான்.. ‘எனக்கு வேற வழியே இல்ல’.. வீச்சு தான்.. அமைச்சர்களுக்கு ‘தலை’ ஃபைனல் வார்னிங்!
சென்னை : திமுக அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையிலும் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், அடுத்து யாராவது சிக்கினால் ஆக்ஷன் தான் என்றும் பரபர தகவல்கள் வருகின்றன.
அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பாஜக, அதிமுகவினர் களமிறங்கி, உன்னிப்பாக கண்காணிக்கும் தகவல் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டத்திலேயே சீனியர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சீக்ரெட்டாகவும் அமைச்சர்களுக்கு வார்னிங் கொடுத்திருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.
இதனால், முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்து யார் தலைவலி கொடுத்தாலும், நடவடிக்கை நிச்சயம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.

ஸ்டாலின் திட்டங்கள்
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் பெண்களின் ஏகபோக ஆதரவை திமுக நோக்கி இழுத்து வந்துள்ளது. ஜெயலலிதா மீதான அபிமானம் காரணமாக அதிமுகவுக்கு வாக்களித்து வந்த பெண்களை ஸ்டாலினை நோக்கி ஈர்க்கச் செய்வதாக இந்தத் திட்டம் கொண்டாடப்படுகிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்கு எதிராக திடீரென ஆங்காங்கே சில எதிர்ப்புக் குரல்கள் பதிவாகின.

முதல்வர் சீரியஸ் பேச்சு
திமுக சீனியர் அமைச்சரின் பேச்சைத் தொடர்ந்து, ஓசி டிக்கெட் எங்களுக்கு வேண்டாம் என சிலர் தகராறு செய்ய முயன்ற வீடியோக்கள் பரப்பப்பட்டன. அதிமுக நிர்வாகி ஒருவர் பணம் கொடுத்து மூதாட்டி ஒருவரை பேருந்தில் அவ்வாறு பேச வைத்ததாகவும் திமுக தரப்பு தெரிவித்தது. அதோடு அந்த சர்ச்சைகள் அப்படியே அமுங்கின. எனினும், திமுக தலைவர் ஸ்டாலின், இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு திமுக சீனியர்களை கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினார். திமுக பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு திமுகவினரையே கதிகலங்க வைத்தது.

வாட்சிங் மோட்
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தமிழகம் முழுவதும் அரசியல் நிலவரத்தை கண்காணிக்கும் சிலர் சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளனராம். திமுக அமைச்சர்கள் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும், அந்தந்த பகுதியைச் சேர்ந்த பாஜக, அதிமுக ஐடி விங் அணியினர் பங்கேற்று வருகிறார்களாம். அவர்கள் நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் பேசுவதையும், அங்கு நடக்கும் நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து, அவற்றை செல்போன்களில் பதிவு செய்தும் வருகிறார்களாம். தவறுதலாக வார்த்தைகளை விடும் புள்ளிகளை கட்டம் கட்டுவதற்காக இது மேலிடத்தில் இருந்தே பிறப்பிக்கப் பட்டிருக்கும் உத்தரவாம்.

கப்பென பிடித்து
திமுகவின் மூத்த அமைச்சர்களில் பலரும், தாங்கள் பேசும் பேச்சுகள் உடனடியாக சமூக வலைதளங்களில் அனைவரின் பார்வைக்கும் வரும் என்ற பிரக்ஞை இன்றி பேசி வருகின்றனர். தவறுதலாக ஒரு வார்த்தை பேசினாலும் கப்பென பிடித்து பாஜக, அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார்கள் என்பதை உணராதது போலவே அவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றன என்றும் திமுக தலைவருக்கு சேதி சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்ந்தால், மக்கள் மத்தியில் ஆட்சி மீது பெரிய அளவில் அதிருப்தி ஏற்படுத்தப்படும், அதற்கு எதிர்க்கட்சிகள் முழுவேகத்தில் தயாராக இருக்கின்றன என்றும் மெசேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னுக்கு இழுக்கின்றனர்
விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளையும், சில அமைச்சர்கள், அதிகாரிகள் தங்கள் செயல்களால் பின்னுக்கு இழுப்பதும் முதல்வரின் பார்வைக்குச் சென்றுள்ளதாம். நரிக்குறவர் சமூகத்தினர் வீட்டிற்கே சென்று முதல்வர் ஸ்டாலின் சாப்பிட்டது வரவேற்பைப் பெற்ற நிலையில், அவர்களுக்கு உதவி சரிவர சென்று சேராததும், அமைச்சர் ஒருவரின் சமீபத்திய நடவடிக்கையும், அடித்தட்டு மக்கள் மத்தியில் லேசான அதிருப்தியை தொடங்கி வைத்துள்ளதையும் முதல்வர் ஸ்டாலின் அறிந்திருக்கிறார்.

தனிப்பட்ட முறையில்
இதன் காரணமாகவே வெளிப்படையாகவே சீனியர்களை கடிந்து கொண்டாராம் முதல்வர் ஸ்டாலின். மேலும், அமைச்சர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் முதல்வர் ஸ்டாலின். எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இனியும் யாராவது தேவையற்ற பேச்சுகளால், அரசுக்கு சிக்கலைக் கொண்டு வந்தால், நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை, என் மீது அவ்வளவு பிரஷர் இருக்கிறது, பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்றும் கடுமையாக முதல்வர் எச்சரித்துள்ளாராம்.

அடுத்து யாராவது சிக்கினால்
இதனால், அமைச்சர்களில் அடுத்து யாராவது முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவலி ஏற்படுத்தும் வகையில் நடந்தால் நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். என்ன செய்தாலும், அமைச்சர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது, இன்னொரு முறை இந்த விமர்சனத்தை ஸ்டாலின் எதிர்கொள்ள விரும்பமாட்டார். இலாகா மாற்றமாவது நிச்சயம் என்கிறார்கள்.
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications