தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதமே இருப்பதால் தொகுதிகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை அவரின் சொந்த ஊரான அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அண்ணாமலை கோவை மாவட்டத்தில் கவனம் செலுத்தினார். அவரின் மனைவி அகிலாவின் சொந்த ஊர் கோவை தான். கோவைக்கு வரும்போது அவரின் மாமனார் வீட்டில் தங்கி வந்தார்.

அண்ணாமலை அதிருப்தி
பிறகு காளப்பட்டி அருகே அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் அவர் வெற்றி பெறாவிடினும் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். கோவையை தங்களின் கோட்டையாக வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
2026 தேர்தலிலும் பாஜக தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி இறுதியானதால் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை கட்சி பணிகளில் இருந்து விலகியிருந்தார்.
தேர்தலில் போட்டியில்லை
தொகுதி பொறுப்பாளர் பதவியில் இருந்தும் அவர் விலகியிருந்தார். அண்ணாமலை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் சொல்லப்பட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகின. இதேபோல கவுண்டம்பாளையம், பல்லடம், பழனி தொகுதிகளிலும் அவர் போட்டியிடுவதாக கூறப்பட்டது. நேற்று அவர் பியூஷ் கோயலை சந்தித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடுவதற்காக யாரிடமும் நான் சீட் கேட்கவில்லை. தொண்டனாக என்னுடைய வேலையை நான் செய்கிறேன். கட்சி தலைமை கூறினால் பார்க்கலாம் என்றார். இந்நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. பரபரப்பான நிலையில் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பு கடிதம்
இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் கட்சி தலைமையான டெல்லிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாராம். அதில், "தனிப்பட்ட காரணங்கள், குடும்ப சூழல் காரணமாக வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளாராம். இது பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் கடிதத்திற்கு பாஜக தலைமை என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications