சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது.. அண்ணாமலை கருத்தால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: இரு ஆளுமைகள் மறைந்த பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Rajini சொன்ன மாதிரியே Annamalai -யும் சொல்றாரே!

    கோவை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் பாஜக மகளிரணி மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    சரி பண்ணலாம்! இலவச இணைப்பாக வரும் ஆளுநர் பதவி! ஆனா 2 சரி பண்ணலாம்! இலவச இணைப்பாக வரும் ஆளுநர் பதவி! ஆனா 2

    அப்போது அவர் பேசுகையில் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மகளிரணியில் புதுமையான நிறைய விஷயங்களை புகுத்தி வருகிறார். அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தமிழக மக்களுக்கு உள்ளது.

     மகளிரணி

    மகளிரணி

    இந்தியாவில் தமிழக மகளிரணி முதலிடத்திற்கு வர வேண்டும். அதுதான் வானதி சீனிவாசனுக்கு பெருமையை சேர்க்கும். அடுத்த 3 ஆண்டுகளில் மிகப் பெரிய சரித்திர மாற்றத்தை இந்த அணி ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. தமிழகத்தில் ஆளுமைகள் மறைந்த பிறகு அரசியலில் மகளிருக்கு வெற்றிடம் அதிகமாகவே உள்ளது.

    அரசியல்

    அரசியல்

    சுத்தமான அரசியலைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். மகளிர் தான் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். மத்திய அரசின் 90 சதவீத திட்டங்கள் மகளிர் நலனுக்காகதான் கொண்டு வரப்படுகிறது. அரசின் வடிவமைப்பு மகளிரை மையமாக வைத்துதான் உள்ளது. மகளிர்கள் வாக்குச் சாவடியில் பாஜகவிற்கு மிகப் பெரிய நம்பிக்கையாக உள்ளனர்.

     நம்பிக்கை

    நம்பிக்கை


    மகளிரிடம் நம்பிக்கை இருக்கும் வரை மோடியை அசைக்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைந்த பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக முதல்முறையாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

    ரஜினி கருத்து

    ரஜினி கருத்து

    ஆனால் ரஜினியின் கருத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் மறுப்பு தெரிவித்திருந்தன. அந்த வெற்றிடத்தை நிரப்ப ஸ்டாலின் இருக்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள் அப்போதே பதிலடி கொடுத்தார்கள். அதே போல் கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறுகையில் தமிழக்தில் வெற்றிடம் இருப்பது உண்மைதான். அதை ரஜினிகாந்த் விரைவில் நிரப்புவார் என கூறியிருந்தார். ஆனால் ரஜினிகாந்த் உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்ணாமலையும் தற்போது தமிழக அரசியலில வெற்றிடம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    BJP Annamalai says that there is a vaccum in Tamilnadu politics after the 2 legends passed away.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X