கடவுளே.. "அண்ணாமலை பூரண உடல் நலன் பெறனும்" கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பாஜகவினர் சிறப்பு வழிபாடு
சென்னை: உடல் நிலை பாதிப்பால் அண்ணாமலையின் பாத யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அண்ணாமலை உடல் நலம் பெற வேண்டி மண் சோறு உண்டும், அங்க பிரதட்சணம் செய்து பாஜகவினர் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலை கடந்த மாதம் 28 ஆம் தேதி குன்னூரில் தனது 2-ஆம் கட்ட யாத்திரையை நிறைவு செய்தார். இதற்கிடையே, தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுகள் சரியில்லை. அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். முக்கியமாக அதிமுகவின் மறைந்த தலைவர்களை தாக்கி பேசி வருகிறார். அவரின் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகிக்கொள்கிறோம் என்று அதிமுக அறிவித்தது. இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.
டெல்லியில் கட்சி தலைமையை சந்தித்து பேசிய பிறகு அண்னாமலை, தமிழ்நாடு நேற்று முன் தினம் திரும்பினார். மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு சுவாச குழாய் தொற்று ஏற்பட்டு உள்ளது.

தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிக்கல், உடல் வலி, சோர்வு ஆகியவை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அவருக்கு சளி தொல்லை, அழற்சி இருப்பது சிடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அண்ணாமலையின் என் மண் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று பாஜக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தான் அண்ணாமலை உடல் நலம் பெற வேண்டி மண் சோறு, அங்க பிரதர்ச்சனை செய்து பாஜகவினர் கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளனர். கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் அண்ணாமலை பூரண உடல் நல பெற பேருர் பட்டீஸ்வரர் கோவிலில் மண் சோறு உண்டும், பிரதட்சணம் செய்தும் வழிபாடு நடத்தினர்.












Click it and Unblock the Notifications