சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருப்பு + சிவப்பு + நீலம் ஒன்றாகட்டும்.. காவியை விட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தை தெறிக்கவிட்ட ஆ.ராசா

கருப்பு சிவப்பு நீலம் ஒன்றிணைய வேண்டும் என்று ஆ ராசா தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி விடலாம் என திமுகவின் துணை பொதுச் செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி சார்பில் பெரியாரியல் பேரறிஞர் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆ.ராசா பேசிய பேச்சு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

நேரம் தவறாத விமான சேவை.. உலகளவில் சென்னை விமான நிலையத்துக்கு 8-வது இடம்! நேரம் தவறாத விமான சேவை.. உலகளவில் சென்னை விமான நிலையத்துக்கு 8-வது இடம்!

சுயமரியாதை

சுயமரியாதை

பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையை பின்பற்றியவர் ஆனைமுத்து என்று ஆ.ராசா புகழாரம் சூட்டினார். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் தானும் ஒரே மாவட்டத்தில் பிறந்தவர்கள் என்றும், ஒரு தந்தைக்கு ஆற்றக்கூடிய கடமையை ஒரு மகன் எப்படி செய்வானோ அப்படியான உணர்வோடு இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

விடுதி

விடுதி

ஆ.ராசா விழாவில் மேலும் பேசியதாவது: "1973-ல் நான் 6-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன்.. பெரியார் குடில் நடத்தினார்.. அதில் நான் படித்தேன்.. அப்போ நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, "இது முருகன் கோயில் விபூதி, காலையில் எழுந்ததும் இந்த விபூதி வெச்சுக்கோ, இருட்டில் போனால் இந்த விபூதி வெச்சுக்கோ" என்று தருவாங்க.. நானும் வெச்சிட்டுதான் இருந்தேன்..

 கடைசி உரை

கடைசி உரை

பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. அதற்கு பிறகு "மதம் ஏன் ஒழிய வேண்டும்" என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்கள் படித்தேன்.. அதன்பிறகுதான் அந்த விபூதியெல்லாம் தூக்கி போட்டேன்.. தூக்கி போட்டதுடன் இல்லாமல், எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது.. அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வெச்சுட்டேன்.. அது உடைந்து ஊரில் பெரிய பிரச்சனை ஆயிடுச்சு.. அதெல்லாம் ஒரு காலம்.. என்
வாழ்வில் நான் மாறியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சுதான்.. அவரது நூல்களும்தான்.

சூத்திரகர்

சூத்திரகர்

மார்க்சியம் எப்படி பார்க்கிறதென்றால், ஒருத்தர்கிட்ட 10 ஏக்கர் நிலம் இருக்கிறது.. அது அவருக்கு உற்பத்தி சாதனம்.. அதற்கு மேல், சூத்திரகரோ அல்லது வேறு யாரோ 2 பேர் வேலைக்கு செய்கிறார்கள்.. உற்பத்தி சாதனத்தின்மீது இவர்களின் உழைப்பு செலுத்தப்படுகிறது.. அந்த உற்பத்தி சாதனத்தின்மீது ஒரு அடிமையின் உழைப்பு, ஒரு கீழ்சாதியின் உழைப்பு சேருகிறபோது, உற்பத்தி கிடைக்கிறது.. லாபம் கிடைக்கிறது.

வர்க்கம்

வர்க்கம்

ஆனால் அந்த லாபத்தில் இந்த அடிமைகளுக்கு ஏதாவது பங்குண்டா? கிடையாது.. எனவே, இங்கு சாதி என்ன சொல்கிறதென்றால், வர்க்கம் என்ன சொல்கிறதோ அதைதான் சாதி பிரதிபலிக்கிறது.. அதனால் இங்கு வர்க்கத்துக்கும் சாதிக்கும் வித்தியாசம் இல்லை என்பதை புரிந்து கொண்டார் மார்க்ஸ் இங்கு தேவைப்படுகிறார்.. இதை எனக்கு சொன்னவரே ஐயா அவர்கள்தான்...

Recommended Video

    கோவை: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்… உரிய கவுரவம் வழங்கப்படும் - ஆ.ராசா பேச்சு!
     3 நிறங்கள்

    3 நிறங்கள்

    இப்போ நாம ஏதாவது உள்ளபடியே செய்யணும்னா, இந்த காவியில் இருந்து வெளியே வரணும்னா, இந்த அயோக்கியத்தனத்தில் இருந்து வெளியே வரணும்னா, யாரெல்லாம் இந்து இல்லை என்று சொல்ல விரும்புகிறீர்களோ, என்னை ஏன் இந்துவாக கட்டிப்போடுகிறாய் என்று கேட்கும் காலம் வருமானால், அது நம் ஐயா ஆனைமுத்துவுக்கு செய்யும் மிகக்பெரிய தொண்டாகும். எனவே, பெரியார் அம்பேத்கார் மார்க்ஸ் இந்த மூவரையும் இணைத்து ஒரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும்.. உங்கள் எல்லாரையும் கேட்டுக் கொள்கிறேன்.. கருப்பும் சிவப்பும் நீலமும் ஒன்றாகட்டும்.. காவியை விட்டுவிடுவோம் என்றார்.

    English summary
    BJP can be toppled if Black Red and Blue combine, says MP A Rasa
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X