பஜனைகளை தடுக்க அரசு சதி! சென்னை அயோத்தியா மண்டபம் கைப்பற்றப்பட்டதால் கொந்தளித்த அண்ணாமலை
சென்னை: ராம நவமி அன்று பெரும்பாண்மை இந்து மக்களை பட்டத்தில் ஆழ்த்தும் வகையில் அயோத்தியா மண்டபத்தை திமுக அரசு கைப்பற்றி இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள அயோத்திய மண்டபத்தை கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டுக்கு எதிராக தொடரப்பட்ட ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இன்று அதை அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்த சென்றனர்.
அப்போது ஏராளமான பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்ய மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் வே.காளிதாஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து விருகம்பாக்கம் ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கலாச்சாரத்தை குழிதோண்ட புதைப்பதா?
இந்த நிலையில் அயோத்திய மண்டபத்தை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "தமிழகத்தில் இந்து சமயத்தின் அறநிலையம் என்பது நம் பண்டைத் தமிழரின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் வழிமுறைகளையும் பேணிக் காப்பதற்கா அல்லது குழிதோண்டி புதைப்பதா என்ற பெரும் கேள்வி. தற்போது எழுந்துள்ளது.

பஜனைகளை தடுக்க திமுக அரசு சதி
இன்று மேற்கு மாம்பலத்தில் உள்ள புகழ்பெற்ற பஜனை மற்றும் பிரசங்க மண்டபம் ஆன அயோத்திய மண்டபத்தை காவல்துறையினரின் கடுமையான அடக்கு முறையை செயல்படுத்தி கைப்பற்றி பூட்டு போட்டுள்ளனர். பகவான் ராமரின் பெயரால், பஜனைகள் நடைபெறும் அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றி இனி அங்கே சத்சங்கங்களும், திருக்கூட்டங்களும், பஜனைகளும் நடைபெறாமல் தடுப்பதில் திமுக அரசு அதிக அக்கறை காட்டி காவல் துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டிருப்பது, கண்டிக்கத்தக்கது. தமிழ் மக்களின் மனத்தை எல்லாம் புண்படுத்த வேண்டும்.

பெரும்பான்மை மக்களை பதட்டத்தில் ஆழ்த்த திட்டம்
பெரும்பான்மைச் சமுதாய மக்களை பெரும் பதட்டத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற மனோபாவத்தில் ராமநவமி அன்று, இராமர் புகழ்பாடும் அயோத்தியா மண்டபத்தை கைப்பற்றியிருக்கிறது திமுக அரசு. இறை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் பழந்தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளை கொச்சைப் படுத்துவதை, தொடர்ந்து செய்து வருகின்றனர். கோவில்களைக் கடந்து பஜனைகள், சத்சங்கங்கள், திருக்கூட்டங்கள் மூலம் பக்தியை பரப்பும் மண்டபங்களிலும் தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள்.

சட்டப்படி இது தவறு
இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கடவுளரின் திருவுருவச் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும் இடங்களில் மட்டும்தான் அறநிலைத்துறை சட்டம் செல்லுபடியாகும். அவற்றைக் கையகப்படுத்த முடியும். அயோத்தியா மண்டபத்தில் இறைவன் திருமேனி சிலை கூட இருக்கவில்லை. ஆகவே அரசின் இந்த நடவடிக்கையை பாஜக வன்மையாக கண்டிக்கிறது." எனக்குறிப்பிட்டு உள்ளார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications