இருபக்கம் இஸ்லாமியர்கள்.. நடுவில் மோடி! முஸ்லிம், கிறிஸ்துவர் அமைதியா வாழலாம் - பாஜக டெய்சி ட்வீட்
சென்னை: முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் இந்தியாவில் அமைதியாக வாழ முடியும் என்றும் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கைகோர்க்க வேண்டும் எனவும் பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கய்யா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 18 ஆம் தேதி தேசிய சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு தினம் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மத்திய மாநில அரசுகள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் மத்திய அரசு சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

தேசிய சிறுபான்மை உரிமைகள் தினம்
மதம் அல்லது மொழி சார்ந்த தேசிய, இன சிறுபான்மையினர் மக்களின் தனி உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை அனைத்து நாடுகளுக்கும் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மற்றும் அவர்களை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு விசயங்கள் இடம்பெற்று இருந்தன.

ஏன் இந்த நாள்?
இந்த நிலையில் சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக ஐ.நா. உலக நாடுகளுக்கு அறிக்கை வெளியிடப்பட்ட நாளான டிசம்பர் 18 ஆம் தேதியை தேசிய சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு தினமாக இந்தியா கடைபிடித்து வருகிறது இந்தியா. இந்த நாளில் மத சுதந்திரம், பாரபட்சமற்ற சம வாய்ப்புகளை சிறுபான்மையின மக்களுக்கு அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது வழக்கம்.

மத்திய அரசு நிகழ்ச்சி
அந்த வகையில் டெல்லியில் கடந்த 16 ஆம் தேதி மத்திய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் ஜான் பர்கலா தலைமையில் சிறுபான்மை உரிமை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் இஸ்லாம், சீக்கியம், கிறிஸ்தவம், பௌத்தம், ஜெயின், சரதுசம் ஆகிய 6 சிறுபான்மை மதங்களை சேர்ந்த தலைவர்கள், மத குருக்கள் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர் ஆலோசனை
இந்த விழாவில் இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் நலனுக்காக மத்திய அரசு செய்து வரும் திட்டங்கள் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக இணை அமைச்சர் ஆலோசித்தார். அப்போது, நாடு முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டு வரும் குற்றங்கள் தொடர்பாக சிறுபான்மை மத பிரதிநிதிகள் மத்திய இணை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் சிறப்பு நிகழ்ச்சி
அதேபோல் தமிழ்நாட்டில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா இன்று நடைபெற்றது. இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி தங்கய்யா தேசிய சிறுபான்மை தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

டெய்சி தங்கய்யா வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி 2 இஸ்லாமியர்களுக்கு நடுவில் அமர்ந்து இருக்கும் படத்தை பகிர்ந்து, "இன்று தேசிய சிறுபான்மையினர் உரிமை தினம்! நாம் இந்தியாவில் முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் பிற மதத்தினருடன் அன்புடனும் மரியாதையுடனும் அமைதியாக வாழ்ந்திட முடியும். நமது அன்பான பிரதமர் மோடியின் தலைமையில் நமது தேசம் வலுப்பெற அனைவரும் கைகோர்ப்போம்" என்று பதிவிட்டு உள்ளார்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications