தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது! ஓபனாக பேசிய விசிகவின் ஆளூர் ஷா நவாஸ்! தவெக ஷாக்!
சென்னை: தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்திருப்பது தவெக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், "பாஜகவின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் நியமித்த தலைமை செயலாளரை மாற்றாதது ஏன்? சாய் குமாரின் பணி காலத்தை நீடித்தது சந்தேகத்தை எழுப்புகிறது.

எல்லோரையும் மாற்றிய இந்த அரசு.. ஏன் சாய் குமாரை மாற்றவில்லை? தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது. தமிழ்நாட்டின் மீது உணர்வுள்ள தலைவர்களை டம்மி ஆக்கியது ஏன்? தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது" என்று விமர்சித்திருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், ஆளூர் ஷ நவாஸ் தவெகவுக்கு எதிராக பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழத்தின் தலைமையிலான அரசில் பங்கெடுத்திருக்கும் விசிக, அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வந்திருந்தது. இருப்பினும் நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான விஷயத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டிலிருந்து விலகி நின்றிருந்தது. தவெகவும் நீட் விலக்கில் உறுதியாக இருப்பதாகத்தான் தெரிவித்திருந்தது. ஆனால், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் தவெகவின் பங்களிப்பு இல்லை.
இடதுசாரிகள், விசிக, திமுக ஆதரவாளர்கள்தான் இந்த போராட்டங்களை லீட் செய்திருந்தனர். தவெக தள்ளியே நின்றிருந்தது. இப்படி இருக்கையில், தற்போது தவெக அரசை ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக விமர்சித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அதேபோல, ஆரம்பத்திலிருந்து ஷா நவாஸ் திமுக டோனில்தான் பேசி வருவதாகவும் விமர்சனங்கள் இருந்தன.


Click it and Unblock the Notifications
