திமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது… கனிமொழி எம்.பி காட்டம்
Recommended Video

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையை பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த ஒரு அருகதையும் கிடையாது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு மாயை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, மாயை என்றாலே பொய் தான் இதில் பொய்யான ஒரு மாயை எப்படி இருக்க முடியும் என்று பதிலளித்தார்.
மேலும், பாஜக உடைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டில் இருந்து, வெளி நாட்டில் இருக்கக்கூடிய கருப்பு பணங்களை மீட்டெடுப்பது, வங்கிக் கணக்கில் பணம் போடுவது என்று சொன்னது வரை எந்த ஒரு வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறினார்.
எனவே, திமுக தேர்தல் அறிக்கையை பற்றியும், அதில் இருக்கக்கூடிய உண்மையைப் பற்றியும் பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் கிடையாது என்றும் தெரிவித்தார். திமுகவை பொறுத்தவரையில் தேர்தல் அறிக்கையில் தொடர்ந்து மக்களுக்கு கொடுக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், வரலாறு காணாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நாடெங்கும் தலைவிரித்து ஆடக்கூடிய அளவிற்கான சூழலை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications