90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
சென்னை : தமிழ்நாட்டில் இருக்கும் 90 சதவீத அமைச்சர்களுக்கு டெல்லிக்கு சென்றால் ஆங்கிலத்தில் பேசக்கூட முடியாதவர்கள் எனவும், விமானம் மூலம் ஏற்றி விட்டால் கூட தனியாக டெல்லி சென்று ஒரு பைசா நிதியை கூட அவர்களுக்கு பெற தெரியாது பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
'திராவிட மாயை' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு புத்தகததை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,. "திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான்" என்றார்.

பாஜக அண்ணாமலை
மேலும், "தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் தீண்டாமையில் திருவாரூர் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பதிவான 600 தீண்டாமை வழக்குகளில் 156 திருவாரூரில் பதிவானவை. திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது.

ஆங்கிலம் தெரியாது
திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள் கோடைகாலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல் என்று கூறுவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் 90 சதவீத அமைச்சர்களுக்கு டெல்லிக்கு சென்றால் ஆங்கிலத்தில் பேசக்கூட முடியாதவர்கள். விமானம் மூலம் ஏற்றி விட்டால் கூட தனியாக டெல்லி சென்று ஆங்கிலம் தெரியாததால் தமிழ்நாட்டிற்கான ஒரு பைசா நிதியை கூட அவர்களால் வெற்றிபெற முடியாது.

மக்கள் கேள்வி
தமிழ்நாட்டில் மக்கள் தற்பொழுது அதிக அளவில் மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்துள்ளனர் எனவே தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. திராவிட மாயை ஒழிப்பதற்கு தான் திராவிட மாடல் கட்சி செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு தலைமுறையினரும் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரு தலை தூக்கி நிற்பது மிகவும் கடினம்

பாஜக ஆட்சி
2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு மைல் கல்லாக இருக்கப் போகிறது. பாஜகவை நோக்கி மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருகிறார்கள். 2026 ல் தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது" என அண்ணாமலை பேசினார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!












Click it and Unblock the Notifications