அன்புக்குரியவர்களுக்கு அரசு பதவி.. அள்ளி அள்ளி கொடுக்கும் CM விஜய்! யார் வீட்டு காசு? கடும் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் ஆலோசகர் பணி நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்? எனவும், தனக்குத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் போன்றவர்களுக்கு அரசுப் பதவிகளைப் பரிசாக வழங்குவதை முதல்வர் நிறுத்திவிட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," முதல்வர் திரு. விஜய் அவர்கள், ஜான் ஆரோக்கியசாமி என்பவரைத் தனது ஆலோசகராக அமர்த்தி, அவருக்கு அரசு வாகனம், காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலேயே தனி அலுவலகம் என அரசு அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளார்.

BJP Leader Nainar Nagendran

இந்த நியமனம் குறித்த அரசாணையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கி உண்மையை மூடி மறைக்கிறது திரு. விஜய் அரசு. இது அரசின் வெளிப்படைத் தன்மையற்ற போக்கை அம்பலப்படுத்துவதோடு, அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளை மறைக்கும் முயற்சியாகும்.

நயினார் நாகேந்திரன்

ஏற்கனவே, தான் கடைசியாக நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணாவிற்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி, தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமிக்கு முதல்வரின் தனிச் செயலாளர் பதவி, தனது நண்பரான விஷ்ணு ரெட்டிக்கு முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசகர் பதவி, தனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்சாவிற்கு எம்.ஜி.ஆர் அரசுத் திரைப்படக் கல்லூரித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா கல்பாத்தி

தனது திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்குக் கோவில்களுக்கான அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவி என திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளைத் தாரைவார்த்து வரும் நிலையில், தற்போது தவெக-வின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் நியமனமும் அந்தப் பட்டியலிலேயே சேர்ந்துள்ளது.

முதல்வர் விஜய்

அதிகாரப்பூர்வமற்ற நபர்களையும், தகுதியைப் பார்க்காமல் தனது சினிமா உறவுகளையும், நண்பர்களையும் மட்டுமே அதிகார மையத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதும், அதற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதும் தவெக அரசு தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். எனவே, இனிவரும் காலங்களில் அனைத்து அரசு நியமனங்களும் ஒளிவுமறைவின்றிப் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

அரசுப் பதவி

தகுதி மற்றும் நேர்மையைப் புறக்கணித்துவிட்டு தனக்குத் தேர்தல் வேலை பார்த்தவர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் போன்றவர்களுக்கு அரசுப் பதவிகளைப் பரிசாக வழங்குவதை முதல்வர் நிறுத்திவிட்டு, தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

'கோட்' தயாரிப்பாளர்

முதல்வர் விஜய் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது அரசு பொறுப்பில் சத்தமில்லாமல் சைலண்டாக நியமித்து வருகிறார்கள். தற்போது கோயில் அறங்காவலர் நியமனகுழுவில் உறுப்பினராக முதல்வர் விஜயின் 'கோட்' தயாரிப்பாளர் கேரளாவை பூர்விமாகக் கொண்ட அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெங்கட் நாராயணா

ஏற்கனவே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் , கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். அதைப்போல முதலமைச்சரின் தனி செயலாளராக முதல்வர் விஜய் நடித்த லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜான் ஆரோக்கியசாமி

தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக முதல்வர் விஜய் நடித்த பீஸ்ட் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய்யின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் ஆகியோர் அரசின் ஆலோசர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+