சொந்த கிராமரத்தில் ஒரு பூத்தில் கூட ஜெயிக்கலை! இதுல அண்ணாமலையை முதல்வராக்க போறாங்களா? பாஜக அட்டாக்
சென்னை: தனது சொந்த கிராமத்திலேயே ஒரு பூத்தில் கூட வெற்றி பெறாத கணியாம்பூண்டி செந்தில் அண்ணாமலையை முதல்வராக்குவேன் என கூறியிருப்பது குறித்து பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது அக்கட்சியில் இருந்து விலகிவிட்டார். வீ தி லீடர்ஸ் எனும் அரசியல் அமைப்பை தொடங்கியுள்ளார்.
இந்த அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

அவர் பாஜகவில் இணையும் போது ரஜினி தொடங்குவதாக இருந்த கட்சியில் இணையுமாறு அவர் கேட்டதாக அண்ணாமலை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் தான் டெல்லியில் பாஜகவில் இணைய வந்திருப்பதாக தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என அண்ணாமலை கடைசி வரை உறுதியாக இருந்ததால் அவர் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை கொண்டு வந்தது. இதில் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் அவர் பாஜகவில் இருந்து விலகி வீ தி லீடர்ஸ் எனும் அமைப்பை தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை தொடங்கிய வீ தீ லீடர்ஸ் அமைப்பில் லட்சக்கணக்கானோர் சேர்ந்துள்ளார். அது போல் பாஜகவில் இருந்து கரு நாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் அண்ணாமலையுடன் இணைந்துவிட்டனர்.
அண்ணாமலை தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்தியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த சட்டசபை தேர்தலின் போதோ அண்ணாமலைதான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவரது ஆதரவாளர்களால் அந்த பேச்சு எழுந்துள்ளது.
முதலில் உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்க்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலையுடன் சென்றவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால் அண்ணாமலை ஆதரவாளர்களோ அவர் நிச்சயம் முதல்வராவார் என்கிறார்கள். அந்த வகையில் கணியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர், அண்ணாமலையை முதல்வராக்காமல் ஓய மாட்டோம் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது கடந்த 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தனது 5 பூத்துகளிலுமே வெற்றி பெறாத செந்தில், அண்ணாமலையை எப்படி முதல்வராக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பூத் எண் 368, 369, 370, 371, 372 ஆகிய 5 பூத்களிலும் பாஜகவை வெற்றி பெற வைக்க அவரால் முடியவில்லை. அந்த 5 பூத்களிலும் தவெக வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்தனர். அவர்களை தொடர்ந்து திமுகவினரும், 3ஆவது இடத்தில் பாஜகவும் இருந்தது.
அண்ணாமலை போன்ற ஒரு அதிகாரி முதல்வராக வேண்டும் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் விவேக்கின் மனைவி கூட அண்ணாமலை கட்சியில் இணைந்துள்ளார். அது போல் அண்ணாமலை தனது கட்சியில் யாரும் நிரந்தர பதவியில் இருக்க மாட்டார்கள் என்றும், நிரந்தர எம்எல்ஏ, எம்பியாக இருக்க மாட்டார்கள் என்றும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இப்படி இவர் அறிவித்திருப்பதால் கட்சியில் அனைவருக்கும் பதவிகளும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
