சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரவணன் பாஜகவில் இருந்து விலக இது மட்டும் காரணமல்ல.. ஏற்கனவே.. உடைத்துப் பேசிய நயினார் நாகேந்திரன்!

Google Oneindia Tamil News

நெல்லை : ஓபிஎஸ்ஸோ, ஈபிஎஸ்ஸோ.. யாராக இருந்தாலும் சரி, பாஜக அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்கும் என்று உறுதியாகக் கூறியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்.

நெல்லையில் முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழா இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானத்தை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

6 வயசுதான்.. கதறித் துடித்த சிறுமி! வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் கைது! அதிர்ந்த சென்னை!6 வயசுதான்.. கதறித் துடித்த சிறுமி! வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் கைது! அதிர்ந்த சென்னை!

அமைச்சர் கார் தாக்குதல் சம்பவம் காரணமல்ல

அமைச்சர் கார் தாக்குதல் சம்பவம் காரணமல்ல

அப்போது நயினார் நாகேந்திரன் பேசுகையில், "அமைச்சர் பிடிஆர் வாகனத்தில் தாக்குதல் நடந்த சம்பவம் காரணமாகத்தான் டாக்டர் சரவணன் கட்சியை விட்டு வெளியேறினார் எனச் சொல்ல முடியாது. ஏற்கனவே டாக்டர் சரவணன் ஒரு மாத காலமாக திமுகவிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.

நான் திமுகவிற்கு போவதாக சொல்கிறார்கள்

நான் திமுகவிற்கு போவதாக சொல்கிறார்கள்

நயினார் நாகேந்திரன் திமுகவிற்கு செல்கிறார் என்று நான் அதிமுகவில் இருந்த காலம் தொட்டு சொல்லி வருகிறார்கள். எந்த அடிப்படையில் நான் திமுகவிற்கு செல்கிறேன் என்று சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவன் நான்.

 திமுகவுடன் நட்பு

திமுகவுடன் நட்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நட்புறவோடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை வைத்து திமுக பாஜகவுடன் நெருங்குகிறது என சொல்லமுடியாது. ஆளுநர் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக கலந்து கொள்ளவில்லை என்பதற்காக பாஜக திமுகவுடன் இருந்து விலகி இருக்கிறது எனவும் சொல்ல முடியாது. பாஜக மத்திய அரசு திமுக மாநில அரசு அவ்வளவுதான்.

திமுக தான் முடிவு செய்ய வேண்டும்

திமுக தான் முடிவு செய்ய வேண்டும்

மாநில அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நன்மையாக இருக்கும். மாநில அரசு மத்திய அரசோடு ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் வாக்களித்த மக்களுக்கு இழப்பாகவே அமையும். எப்போதும் பா.ஜ.க ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. எங்களுடன் நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும்.

Recommended Video

    PTR மீது செருப்பு வீசப்பட்டது பாஜகவின் திட்டம்- Dr. சரவணன்
    அதிமுகவுடன் தான் கூட்டணி

    அதிமுகவுடன் தான் கூட்டணி

    அதிமுகவுடன் தான் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் பாஜக உறுதியாக உள்ளது. ஓபிஎஸ் ஆக இருந்தாலும் சரி ஈபி.எஸ் ஆக இருந்தாலும் சரி அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. மீண்டும் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார்." எனத் தெரிவித்தார்.

    English summary
    BJP MLA Nainar Nagendran said that BJP is firm on its stand of alliance with AIADMK, Whether it is OPS or EPS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X