தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்.. தலைமை செயலகத்தில் குவிந்த பாஜக நிர்வாகிகள்.. பின்னணி!
சென்னை: பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பாக உள்துறை செயலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாஜக பிரமுகர்கள், பாஜக அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளன. இதனால் கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாஜக தரப்பில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன.

உள்துறை செயலரிடம் கோரிக்கை
இந்த நிலையில் பாஜக சார்பில் டிஜிபி மற்றும் உள்துறை செயலரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், சமீப காலமாக தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுகிறது. பாஜக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும்.

பாதுகாப்பு வழங்க மனு
பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி மற்றும் தோழமை அமைப்புக்களின் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினர்.

நாராயணன் திருப்பதி பேட்டி
இதனைத்தொடர்ந்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த 2 நாட்களாக எவ்வித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது வருத்தத்திற்குரிய விஷயம்.

கடும் நடவடிக்கை தேவை
தற்போது உள்துறை செயலரை சந்தித்து பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதேபோல் அமைதி பூங்காவான தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு என்பது அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தீய சக்திகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications