மனுஸ்மிருதி கொடுத்தால்.. பெரியார் தமிழை கேவலமாக பேசியதாக நோட்டீஸ் கொடுப்போம்.. பாஜக "பளீர்" பிளான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 'மனுஸ்மிருதி' நூலை அச்சிட்டு அதனை பொதுமக்கள் மத்தியில் வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் நேற்று(நவ.06) இது அக்கட்சியினரால் ஒரு இயக்கமாகவே கொண்டு செல்லப்பட்டது. இந்நூலில் பெண்கள் குறித்து எழுதப்பட்டுள்ள கருத்துக்களை பகிரங்கப்படுத்தவே இந்த இயக்கம் நடத்தப்பட்டதாக விசிக கூறியது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெரியார் தமிழ் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை நோட்டீஸாக மக்களிடம் விநியோகிக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வரவேற்பளித்துள்ளார்.

மனுஸ்மிருதி

மனுஸ்மிருதி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, இந்துக்களின் புனித நூலாக உள்ள மனுஸ்மிருதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தவிர்த்து இதர சமூகத்தினரை தாழ்த்தி கூறியுள்ளதாகவும், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இந்நூல் குறிப்பிட்டுள்ளதாகவும் எனவே இதனை மக்களிடத்தில் பகிரங்கப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இந்நூல் 1 லட்சம் பிரதிகள் விநியோகிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

விசிக

விசிக

இதனையடுத்து நேற்று இது இந்நூல் விசிகவினரால் பல்வேறு இடங்களில் விநியோகிக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு அருகே கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்நூலை பொதுமக்களுக்கு விநியோகித்தார். அப்போது பேட்டியளித்த அவர், "இந்துக்களின் நலனுக்காக இந்நூலை விநியோகிக்கிறோம். அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் இந்துக்கள் மனுஸ்மிருதி கோட்பாட்டைதான் பின்பற்றி வருகின்றனர். பார்ப்பனர்கள் அல்லாதோரை சூத்திரர்கள் என இந்நூல் சொல்கிறது.

பெரியார்

பெரியார்

இதனை அரசியலமைப்பு சட்டமாக மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சித்து வருகிறது. சமூகநீதியும், சகோதரத்துவமும் வேண்டாம் என்பதே மனுஸ்மிருதியின் அடிப்படை கருத்தியல். எனவே இதனை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெரியார் தமிழ் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை நோட்டீஸாக மக்களிடம் கொண்டு விநியோகிக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வரவேற்பளித்துள்ளார்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

அதாவது, 'ஆன்மிக இந்துமதக் கட்சியின்' தலைவர் கோபி தனது டிவிட்டர் பக்கத்தில் "விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மனுஸ்ருமிதி புத்தகத்தை மக்களிடம் கொடுக்கிறார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் பெரியார் பக்கம் 21 ஐ தெளிவாக நோட்டீஸ் போட்டு தமிழகம் முழுவதும் தெருத் தெருவாக தர வேண்டும். இவர்களுக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும். மற்றும் பெரியார் தமிழ் மொழியை கேவலமாக பேசியதையும் குடும்பப் பெண்களை மிகக் கேவலமாக பேசிய ஆதாரத்தையும் நோட்டீஸாக போட்டு தர வேண்டும்." என்று கூறியுள்ளார். இதனை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா 'நல்ல யோசனை' என வரவேற்றுள்ளார்.

பெரியார் கூறியது என்ன?

பெரியார் கூறியது என்ன?

'பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி' என்று கூறியுள்ளார் என்பது பெரியாருக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் காலங்காலமாக வைத்து வரும் ஒரு குற்றச்சாட்டுதான். இது குறித்து பலரும் அவ்வப்போது விளக்கமளித்து வந்திருந்தாலும், அதை விமர்சகர்கள் ஏற்பதில்லை. இதே பெரியார்தான், ணா,றா,னா, னை,ணை,லை,ளை,ணொ,ணோ,னொ,னோ,றொ,றோ உள்ளிட்ட எழுத்துகளை சீர்படுத்தினார் என்று கலி.பூங்குன்றன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+