Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓராண்டு சாதனை என திமுக வெளியிட்ட வீடியோவுக்கு போட்டியாக ஓராண்டு சோதனை என வீடியோ வெளியிட்ட பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதை அடுத்து திமுக வீடியோ வெளியிட்ட நிலையில், அதற்கு போட்டியாக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக அரசின் ஓராண்டு பணிகள் பட்டியலிடப்பட்டு இருந்தது.

அதில், "அனைத்து மகளிருக்கும் இலவச பஸ் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, முதல்வரின் முகவரி, ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்கள் என அறிவிப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவி, மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை, கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராவுக்கு திருவுருவச் சிலை போன்றவை இடம்பெற்றுள்ளன.

சிங்காரச் சென்னை

சிங்காரச் சென்னை

அதேபோல், ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை, மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு, கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல், மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், மக்களைத் தேடி மருத்துவம், காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை, மின்னகம் செயலி, சிங்காரச் சென்னை திட்டம் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளது.

121 சாதனைகள்

அண்ணா நூற்றாண்டு நூலகம் புணரமைப்பு, குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம், பெண் காவலர்களுக்கு இலகுவான பணி, மக்களை தேடி மருத்துவம், காந்தி அருங்காட்சியகம், மகப்பேறு விடுப்பு காலம் நீட்டிப்பு, ஆதிதிராவிட பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம், நகைக்கடன் தள்ளுபடி, இல்லம் தேடிக் கல்வி, கூட்டுறவு மருந்தகம், மஞ்சப்பை, தமிழ்தாய் வாழ்த்து மாநிலப் பாடல், சமூக நீதி நாள், பொருளாதார ஆலோசனைக் குழு, தமிழில் அர்ச்சனை உள்ளிட்ட 121 பணிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

பாஜகவின் போட்டி வீடியோ

இதற்கு போட்டியாக திமுகவின் ஓராண்டு ஆட்சியில் உள்ள பிரச்சனைகள் என்று குறிப்பிட்டு பாஜக 6:46 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. "ஒன்று இரண்டு பிரச்சனைகள் என்றால் 1 நிமிடத்தில் காணொலியை முடித்திருக்கலாம் ஆனால்..." என்ற வரியோடு தொடங்கும் அந்த வீடியோவில், ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை பாஜக தெரிவித்துள்ளது.

Recommended Video

    1 Year Of CM Stalin Special Song | உங்களில் ஒருவர் உயிருள்ள கலைஞர் | Oneindia Tamil
     ஊழல், சட்டம் ஒழுங்கு

    ஊழல், சட்டம் ஒழுங்கு

    "பிஜிஆர் நிறுவன ஊழல், லேப்டாப் ஊழல், பொங்கல் பரிசுத் தொகுப்பு ஊழல், போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கிய ஊழல், அரசு அதிகாரிகளின் லஞ்சம், வரி உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ரூ.1,000 உரிமைத் தொகை வழங்காதது, பெண்கள் பாதுகாப்பு மீறல், பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, கொலை, கொள்ளை, லாக் அப் மரணங்கள்." என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாஜக அந்த வீடியோவில் சுமத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+