தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு இணையாக பாஜக! ஆனால் ‘அவங்க’ ஒன்னு சேரணும்! பஞ்சாயத்து பேசும் பாஜக பிரபலம்?
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பான மோதல் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வரும் நிலையில் பாஜக இரு தரப்பினரையும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதனை உண்மையாக்கும் வகையில் பாஜக பிரமுகர் கரு. நாகராஜன் அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்று சேர வேண்டுமென வெளிப்படையாக அழைப்பு விடுத்து இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தற்போதைய நிலவரப்படி சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ,பன்னீர்செல்வம் என அதிமுக பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. இதனால் பிரதான அரசியல் எதிரியான திமுகவுக்கே லாபம் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
டிடிவி கட்சி ஆரம்பித்து விட்ட நிலையில், சசிகலா அதிமுகவை ஒன்றிணைப்பேன் என கூறி வருகிறார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு அரசியல் சூழல்களில் பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் அதிமுக அதிகார மோதல் காரணமாக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

பிரதான எதிர்கட்சி
குறிப்பாக மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போராட்டங்களை அறிவித்தாலும் அது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை திட்டி தீர்க்கும் பொதுக்கூட்டங்களாகவே பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை விடுவது ட்விட்டர் பதிவு என அரசியல் செய்து வருகிறார். இதனால் அரசியல் களத்தில் திமுகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவில்லை என்பதை அக்கட்சியினரே ஒப்புக்கொள்கின்றனர். மேலும் வருகின்ற மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பாஜக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.

பன்னீர்செல்வம்
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்க்கும் திட்டம் துளியும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அதே நேரத்தில் பாஜக தலைமை தொடர்ந்து இருவரையும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திரை மறைவு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடவில்லை என்று கூறி வந்தனர். இந்த நிலையில் பாஜக முக்கிய பிரமுகர் ஆன கருணாக ராஜன் எடப்பாடி பழனிச்சாமியின் ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் ஒன்றும் செய்ய வேண்டும் என வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

கரு.நாகராஜன்
சென்னை ஆலந்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சக்தி கேந்திரா கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக பாஜகவின் துணைத்தலைவர் கரு நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "எதிர்க்கட்சியான அதிமுகவை விட மக்களுக்கு தேவையான போராட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது அதிமுகவோ பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை எனவும் கூற முடியாது. ஆனால் அதிமுகவை விட பாஜக அதிகமாக போராட்டங்களில் ஈடுபடுகிறது. திமுகவை விட சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு உள்ளிட்ட போராட்டங்களை பாஜக முன்னிலையில் உள்ளது. அதிமுகவுக்கு இணையாக பாஜக செயல்படுகிறது.

ஒன்றிணைய வேண்டும்
தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் திமுகவை தோற்கடிக்க அனைத்து சக்திகளும் ஒன்று இணைய வேண்டும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குழப்பம் முழுக்க முழுக்க அவர்களது உட்கட்சி பிரச்சனை. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக என்னால் கருத்து சொல்ல முடியாது. அதே நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள் என்பது மட்டும் உறுதி" என கூறி இருக்கிறார் இதன் மூலம் பாஜக அதிமுக மீண்டும் ஒன்றிணைவதை விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications