சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமாக அதிகரிக்கும் பிளாக் பங்கஸ் கேஸ்கள்.. ஆம்போடெரிசின் பி மருந்துக்கு தட்டுப்பாடு.. தொடரும் அவலம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிகரித்து வரும் பிளாக் பங்கஸ் கேஸ்கள் காரணமாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Black Fungus எப்படி ஏற்படுகிறது? | எவ்வாறு தடுப்பது? | Treatments & Medicines | Dr VPB Paramasivam

    இந்தியாவில் பிளாக் பங்கஸ் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வேகமாக கேஸ்கள் பரவுவதாலும், இதனால் பலர் அடுத்தடுத்து பாதிக்கப்படுவதாலும், பலியாவதாலும் தற்போது பிளாக் பங்கஸ் எபிடமிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    3 நாளாக முதலிடம்.. உள்மாவட்டங்களில் மோசமாகும் நிலை.. தமிழகத்திற்கு உடனடி தேவை ஸ்டிரிக்ட் லாக்டவுன்! 3 நாளாக முதலிடம்.. உள்மாவட்டங்களில் மோசமாகும் நிலை.. தமிழகத்திற்கு உடனடி தேவை ஸ்டிரிக்ட் லாக்டவுன்!

    இந்தியாவில் இதுவரை 5500 பேர் பிளாக் பங்கஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிளாக் பங்கஸ் காரணமாக 126 பேர் நாடு முழுக்க பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 90 பேர் இதுவரை பிளாக் பங்கஸ் காரணமாக பலியாகி உள்ளனர்.

     ஆம்போடெரிசின் பி

    ஆம்போடெரிசின் பி

    இந்த நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் பிளாக் பங்கஸ் கேஸ்கள் காரணமாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிளாக் பங்கஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது பிளாக் பங்கஸ் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்தாகும். டெல்லி, தெலுங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கோவா, உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆம்போடெரிசின் பி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

     குறைகிறது

    குறைகிறது

    இந்த மாநிலங்களில் ஒன்று ஆம்போடெரிசின் பி வேகமாக குறைந்து வருகிறது, அல்லது மொத்தமாக காலியாகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. மகாராஷ்டிராவில்தான் இந்தியாவின் மொத்த பிளாக் பங்கஸ் மரணங்களில் 70% மரணங்கள் ஏற்பட்டுள்ளது. இங்கு 1500 பேருக்கு பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளது.

    எவ்வளவு

    எவ்வளவு

    அடுத்த ஒரு மாதத்திற்கு 1.50 லட்சம் குப்பி ஆம்போடெரிசின் பி மருந்துகள் மகாராஷ்டிராவிற்கு தேவை. ஆனால் அவர்களுக்கு மத்திய அரசு 16000 மருந்துகளை மட்டுமே வழங்கி உள்ளது. ஒரு நோயாளிக்கு ஒரு நாளுக்கு 2 முறை என்ற கணக்கில் ஆம்போடெரிசின் பி மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

     குஜராத்

    குஜராத்

    குஜராத்தில் 1500 பேருக்கு பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் 150 பேருக்கு மட்டுமே ஆம்போடெரிசின் பி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. அதேபோல் குஜராத்தில் மொத்தமாக ஆம்போடெரிசின் பி காலியாகிவிட்டது. மத்திய அரசிடம் இந்த மருந்துக்காக ஒடிசா அரசு கோரிக்கைகளை வைத்துள்ளது. கர்நாடகாவிலும் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகா

    கர்நாடகா

    கர்நாடகாவில் இந்த மாதத்திற்கு 20 ஆயிரம் குப்பி ஆம்போடெரிசின் பி தேவைப்படும் நிலையில் 1000 மட்டுமே உள்ளதாக அம்மாநிலம் தெரிவித்துள்ளது. அதேபோல் மத்திய அரசிடம் 50 ஆயிரம் ஆம்போடெரிசின் பி கேட்டும், தங்களுக்கு வெறும் 7000 ஆம்போடெரிசின் பி மட்டுமே கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் அரசு கூறியுள்ளது. மகாராஷ்டிராவிலும் 24000 மருந்துகள் தேவைப்படும் நிலையில் 4800 மருந்துகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

    கேரளா

    கேரளா

    கேரளாவில் 15 பேருக்கு பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ள நிலையில் ஆம்போடெரிசின் பி 150 மட்டுமே உள்ளது. தமிழகத்தில் மட்டுமே தற்போது பெரிய தட்டுப்பாடு இல்லை என்றாலும் விரைவில் இங்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். கொரோனா பரவல் தொடங்கிய போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெமிடிஸ்வர் தட்டுப்பாடு நிலவியது. தற்போது ஆம்போடெரிசின் பி மருந்துக்கு பிளாக் பங்கஸ் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது.

    English summary
    Black Fungus: Amphotericin B shortage in more than 10 states as Mucormycosis cases are raising in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X