சேலம் விவசாய கிணற்றில் 7 மாத கர்ப்பிணியின் உடல் சாக்குமூட்டையில் கண்டெடுப்பு! காதலனே கொன்ற கொடூரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், பாச்சாலியூர் அருகே திருமணம் ஆகாமலேயே 7 மாத கர்ப்பிணி, விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணை அவரது காதலனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் கோண சமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (23). இவருக்கு திருமணம் ஆகவில்லை என சொல்லப்படுகிறது.

salem 7 months pregnant woman

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறியதால் பெற்றோர்கள் சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனராம்.

திருமணமாகாத பெண், 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனராம். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர், இது சம்பந்தமாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் கோகிலாவின் கர்ப்பத்திற்கு காரணமான கன்னியாம்பட்டியைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் அம்மாசியை சங்ககிரி மகளிர் காவல் நிலையம் வரவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அம்மாசியை எச்சரித்து அவருடன் சமரசம் பேசி திருமணம் செய்து வைத்து அவருடன் கோகிலாவை கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, காலை கோகிலா காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை பேராக் கவுண்டரிடம், அம்மாசி கூறினாராம். இதனால் பதறிய பேராக் கவுண்டர் தனது மகள் கோகிலாவை காணவில்லை என கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே வெள்ளாளபுரம் கிராமம் தானக்குட்டி வளவைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து கிணற்றை பார்த்தபோது வெள்ளை நிற சாக்குப்பை மூட்டை ஒன்று மிதந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொங்கணாபுரம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் எடப்பாடி தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு விவசாயக் கிணற்றில் கிடந்த மூட்டையை வெளியே எடுத்து பார்த்தபோது பெண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட பெண் கோகிலாவாக இருக்குமோ? என்று அவரது உறவினர்களை வரவழைத்து பார்த்தபோது அந்த சடலம் கோகிலா என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோகிலாவின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அம்மாசியை பிடித்து விசாரணை செய்த போது அவர்தான் கோகிலாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

அம்மாசியுடன் சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்ட கோகிலா, திருமணம் செய்து கொள்ளுமாறு நச்சரித்ததால் கொலை செய்ததாக அம்மாசி வாக்குமூலம் அளித்துள்ளார். மகளை இழந்த பெற்றோர் அவரது சடலத்தை கண்டு கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+