சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை பணக்கார்களுக்கு ஷாக் கொடுப்பாரா நிர்மலா சீதாராமன்.. பரம்பரை சொத்துக்கு வரி?

Google Oneindia Tamil News

டெல்லி: பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், இந்த பட்ஜெட்டில் பெரும் பணக்காரர்களுக்கு செக் வைக்கும் வகையில் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்படுத்தினாலும் செயல்படுத்துவார் என ஆச்சர்யப்பட வைக்கும் தகவலகள் வந்துள்ளன.

ஒவ்வொரு முறை நாட்டின் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது புதிய வரிகள் அல்லது சலுகைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என பெரிய எதிர்பார்ப்புகள் வரும்.

 budget 2019 : Nirmala Sitharaman may be introduced Tax on hereditary property?

அந்த வகையில் பல ஆண்டுகளாக பணக்காரர்களை மிரட்டி வந்த பரம்பரை சொத்துக்கான வரியை இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கொண்டுவந்துவிடுவோரா என பணக்காரர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. ஏனெனில் அப்படிப்பட்ட யூகத்தகவல்கள் இன்று வெளியாகி உள்ளது.

பரம்பரை சொத்துக்களுக்கு வரி என்பது பணக்கார்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமமான வரியாகும். இந்த வரி 1953ம் ஆண்டு கொண்டவரப்பட்டதாகவும் .இந்த வரி 10 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை விதிக்கப்பட்டது. இந்த வரியை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது நீக்கிவிட்டார்.

இந்த பரபம்பரை வரி என்பது 100 கோடி சொத்து சேர்த்த தந்தை தனது இரண்டு மகன்களுக்கு தலா 50 கோடி என சொத்தை கொடுத்தால் அதில் 10 சதவீதத்தை அதாவது தலா 5 கோடியை இரண்டு மகன்களும் கட்ட வேண்டும். இந்த வரி இப்போது இல்லாத நிலையில் முத்திரைத்தாள் என்ற பெயரில் தானாமாக சொத்தை வழங்கினாலும் அதற்கு மக்கள் குறைவான வரி கட்ட வேண்டிய நிலை மட்டும் இப்போது இருக்கிறது.

ஆனால் இந்தியாவை தவிர அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் பரம்பரை சொத்துவரி வெவ்வேறு பெயர்களிலும் வெவ்வேறு சதவீத அடிப்படையிலும் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மத்திய அரசு இந்த வரியை மீண்டும் கொண்டுவரலாம் என்கிறார்கள். அப்படி ஒருவேளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரம்பரை வரியை அறிமுகம் செய்தால், நிச்சயம் பணக்கார்களுக்கு அதிர்ச்சியான அறிவிப்பாகவே இருக்கும். ஆனால் அப்படி அறிவிப்பு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என டெல்லி வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

English summary
budget 2019 : Finance Minister Nirmala Sitharaman may be introduced Tax on hereditary property?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X