சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாடு லாக்டவுன்.. அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகள் நிறுத்த வாய்ப்பு?.. விரைவில் அறிவிப்பு?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,.

தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருபக்கம் ஓமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது

அப்போ சீக்கிரமே லாக்டவுன் தளர்வுகளா? 20 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் செம மாற்றம்.. குட்நியூஸ் அப்போ சீக்கிரமே லாக்டவுன் தளர்வுகளா? 20 நாட்களுக்கு பின் தமிழ்நாட்டில் செம மாற்றம்.. குட்நியூஸ்

ஊரடங்கு அமல்

ஊரடங்கு அமல்

கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டுதான், தமிழக அரசு ஊரடங்கை மீண்டும் கையில் எடுத்தது. கடந்த 6-ம் தேதி முதல் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு ஊரடங்கில் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள் உள்ளிட்ட சிலவற்றை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்கள்

அண்டை மாநிலங்கள்

இரவு ஊரடங்கின்போது மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் பொது போக்குவரத்து இயங்குவதில்லை. இப்படி ஊரடங்கு போடப்பட்ட போதிலும் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் தமிழகத்தின் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

கேரளாவில் உச்சத்தில் கொரோனா

கேரளாவில் உச்சத்தில் கொரோனா

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஆந்திராவில் தினமும் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு பதிவாகி வருகிறது. இதேபோல் கர்நாடகாவிலும் 20,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும், தமிழகத்தில் இருந்து இந்த மாநிலங்களுக்கும் அரசு, தனியார் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை இல்லை

பரிசோதனை இல்லை

பிற மாநிலங்களில் பேருந்துகளிலும் தமிழகத்துக்கு வந்து செல்கின்றன. கேரளா மாநில எல்லையான வாளையார், களியக்காவிளை, தென்காசி ஆகிய இடங்களில் சோதனை தீவிரமாக உள்ளது. கர்நாடக எல்லை பகுதிகளிலும் சோதனை மிக தீவிரமாக உள்ளது. ஆனாலும் பேருந்துகளில் வருபவர்கள் அனைவரும் 2 டோஸ் போட்டு இருந்தால் உள்ளே வர அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதில்லை.

பேருந்து சேவை நிறுத்தம்?

பேருந்து சேவை நிறுத்தம்?

இதன் காரணமாக கேரளாவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் கொரோனா தொற்று தமிழகத்துக்குள் மேலும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு விரைவில் அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை சிறிது காலம் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பேருந்தில் வரும் அனைவரையும் சோதனை செய்வது இயலாத காரியம் என்பதால் மாநிலங்களுக்கு இடையே பொது பேருந்துகளை நிறுத்துவதே சரியான முடிவாக இருக்கும் என்று அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Corona infection is on the rise in Tamil Nadu. Similarly, in neighboring states of Kerala, Karnataka and Andhra Pradesh, bus traffic is likely to be halted due to rising Corona
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X