சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரவு ஊரடங்கு.. பகலில் இயக்கப்படும் பஸ்கள்.. உங்க ஊரில் இருந்து புறப்படும் கடைசி பஸ் டைம் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் தொலைதூரம் மற்றும் குறுகிய தூரம் செல்லும் பஸ்கள் பகலில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

Recommended Video

    தொடங்கியது பகல் நேர சேவை: தென்மாவட்டங்களுக்கு புறப்பட்ட பேருந்துகள்!

    தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10,000-க்கும் மேல் சென்று வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் தமிழக அரசு வேறு வழியின்றி இரவு நேர ஊரடங்கை கையில் எடுத்துள்ளது.

    இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இது தவிர ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போதுமானதல்ல- டாஸ்மாக் கடையை மூட வேண்டும்: டாக்டர் ராமதாஸ் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போதுமானதல்ல- டாஸ்மாக் கடையை மூட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

    பகலில் இயக்கப்படும் பஸ்கள்

    பகலில் இயக்கப்படும் பஸ்கள்

    இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எவற்றுக்கும் அனுமதியில்லை. இரவு ஊரடங்கு நேரத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்க அனுமதியில்லை. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட நீண்ட துரத்திற்கான வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பகலில் இயக்கப்படுகின்றன. இரவு 8 மணிக்குள் இலக்கை சென்றடையும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நெல்லை-தென்காசி- தூத்துக்குடி

    நெல்லை-தென்காசி- தூத்துக்குடி

    திருநெல்வெலியில் இருந்து தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும். நெல்லையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பஸ்கள் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்கப்படும். தென்காசியில் இருந்து நெல்லை, அம்பை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு இரவு 8 மணி வரையிலும், தென்காசியில் இருந்து மதுரைக்கு மாலை 6 மணி வரையிலும் பஸ்கள் இயக்கப்படும்.

    மதுரை- கோவை-சென்னை

    மதுரை- கோவை-சென்னை

    மதுரையில் இருந்து சென்னைக்கு நண்பகல் 12 மணிவரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். மதுரையில் இருந்து சேலம், கோவை, ஈரோடு, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு மாலை 5 மணி வரையிலும், கொடைக்கானலுக்கு மாலை 5.45 மணி வரையிலும் பஸ்கள் இயக்கப்படும். திருப்பூர், பொள்ளாச்சி, இராமேஸ்வரம், தென்காசி ஆகிய ஊர்களுக்கு மாலை 6 மணி வரையிலும்,கரூர், கம்பம், பழனி, திருச்சி, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு மாலை 7 மணி வரையிலும், இராஜபாளையத்திற்கு இரவு 7.30 மணி வரையிலும் பஸ்கள் இயக்கப்படும். தேனி, திண்டுக்கல், சிவகங்கை, கோவில்பட்டி, சிவகாசி ஆகிய ஊர்களுக்கு இரவு 8 மணி வரையிலும், நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை, நத்தம் ஆகிய ஊர்களுக்கு இரவு 8.30 மணி வரையிலும் பஸ்கள் இயக்கப்படும்.

    காஞ்சிபுரத்தில் கடைசி பஸ் எப்போது?

    காஞ்சிபுரத்தில் கடைசி பஸ் எப்போது?

    காஞ்சிபுரத்திலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு செல்ல மதியம் 3 மணி வரையிலும், ஆந்திர மாநிலமான திருப்பதிக்கு செல்ல இரவு 8 மணி வரையிலும் பஸ்கள் இயக்கப்படும். திருச்சிக்கு மதியம் 3:15 மணிக்கும், சேலத்திற்கு 2.30 மணிக்கும், திருவண்ணாமலைக்கு மாலை 6 மணிக்கும், விழுப்புரத்திற்கு 7 மணிக்கும், சென்னை வேலூர் செங்கல்பட்டு பகுதிகளுக்கு இரவு 8 மணி வரை மட்டுமே கடைசி பேருந்துகள் இயக்கப்படும்.

    திருச்சி-சென்னை- தஞ்சாவூர்

    திருச்சி-சென்னை- தஞ்சாவூர்

    திருச்சியில் இருந்து சென்னைக்கு மாலை 3 மணி வரையிலும், விழுப்புரம் மாலை 6 மணி, சேலத்துக்கு மாலை 5 மணி, முசிறி நாமக்கல்லுக்கு இரவு 8 மணிக்கு, கோவைக்கு மாலை 5 மணிக்கும், திருப்பூருக்கு மாலை 6 மணிக்கும், கரூருக்கு இரவு 7 மணிக்கும், பழனிக்கு மாலை 6 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணிக்கும், மணப்பாறைக்கு இரவு 9 மணிக்கும், மதுரைக்கு இரவு 7 மணிக்கும், தஞ்சாவூருக்கு இரவு
    8 மணிக்கும், கும்பகோணத்துக்கு இரவு 7 மணிக்கும், வேளாங்கண்ணிக்கு மாலை 5.30 மணிக்கும், புதுக்கோட்டைக்கு இரவு 8.30 மணிக்கும், காரைக்குடிக்கு இரவு 7 மணிக்கும் கடைசிப் பஸ்கள் புறப்படும். பெரம்பலூருக்கு இரவு 8.30 மணிக்கும், அரியலூருக்கு இரவு 8 மணிக்கும், ஜெயங்கொண்டத்திற்கு இரவு 7மணிக்கும், துறையூருக்கு 8.45 மணிக்கும் கடைசி பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆம்னி பஸ்கள் இயக்கம்

    ஆம்னி பஸ்கள் இயக்கம்

    இதேபோல் சென்னையில் இருந்து தொலைதூர இடங்களுக்கும், நாகர்கோவில், நெல்லை, மதுரை தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கும் காலையில் இருந்து அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பகல் நேர பயணத்தில் மக்கள் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான பஸ்கலில் கூட்டம் இல்லை. இதுபோக சென்னையில் இருந்து நீண்ட தூர ஊர்களுக்கு தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் பயணிகள் கூட்டம் இல்லாததால் குறைந்தளவு ஆம்னி பஸ்களே இயக்கப்படுகின்றன.

    English summary
    Long distance and short distance buses will operate only during the day as the night curfew will come into effect in Tamil Nadu from today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X