ஐயோ பாவம்.. சொந்த வீடு கூட இல்லையாம்.. வாடகை வீட்டில் வசிக்கும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்!
சென்னை: எனக்கு பல கோடி ரூபாயில் வீடு இருப்பதாக கூறுகிறார்கள். சென்னை அடையாறில் நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் என முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி விஜயபாஸ்கர். இவர் கொரோனா நேரத்தில் சிறப்பாக செயல்பட்டவர். இந்த நிலையில் குட்கா சட்டவிரோத விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக இவர் மீது ஒரு புகார் உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு சொந்தமான இடஙகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

சி விஜயபாஸ்கர்
சி விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கும் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையெல்லாம் வைத்துதான் நேற்று அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் 18.37 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

சொகுசு வீடு
விஜயபாஸ்கருக்கு பல கோடி மதிப்பிலான சொகுசு வீடு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் சி விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சென்னையல் 100 பேர் குடியிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நான் தங்கியுள்ளேனன்.

வாடகை வீடு
அங்கு வாடகைக்கு இருக்கிறேன். எனக்கென சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பெல்லாம் இல்லை. இந்த குடியிருப்பிலும் எனக்கென தனிப்பட்ட வசதிகள் ஏதும் இல்லை. எனது சொந்த ஊரிலேயே சொந்த வீடு இருக்கிறது. சென்னையில் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்.

குழந்தைகள் படிப்புக்காக
என்னுடைய குழந்தைகள் படிப்புக்காக அடையாறில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வருகிறேன். எனவே பல கோடி மதிப்பில் வீடு வைத்திருப்பதாக கூறுவதெல்லாம் தவறு என கூறியுள்ளார். நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டிலும் அதிரடி சோதனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications