கடனில் தத்தளித்த காபி டே.. ஒரே வருடத்தில் மாபெரும் மாற்றம் செய்த சித்தார்த் மனைவி மாளவிகா! வேற லெவல்
சென்னை: கடனில் தத்தளித்துக்கொண்டிருந்த காபி டே நிறுவனத்தை ஒரே ஆண்டில் பெரியளவில் மீட்டிருக்கிறார் அதன் சி.இ.ஓ மாளவிகா ஹெக்டே.
Recommended Video

2019 கஃபே காபி டே சி.இ.ஓ-வாக இருந்த சித்தார்த் மங்களூருவில் தற்கொலை செய்துகொண்டார். கழுத்தை நெறிக்கும் கடன், வெளி அழுத்தம் என பல்வேறு காரணங்களால் சித்தார்த் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்தது.
காபி டே நிறுவனர் சித்தார்த்தின் நிறுவனத்துக்கு 7000 கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில் 2020ல் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.
பெங்களூரைச் சேர்ந்த கஃபே காபி டே, இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் காபி ஷாப்களை நடத்தி வருகிறது. இது இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனமாகவும் மக்களாலும் கொண்டாடப்பட்டு வந்தது. ஸ்டார்பக்ஸ், பாரிஸ்டா மற்றும் கோகா கோலா கோ-சொந்தமான கோஸ்டா காபி போன்றவற்றுக்கு கடுமையான போட்டியாளராக சித்தார்த்தின் கஃபே காபி டே நிறுவனம் வளர்ந்தது.

சித்தார்த்தின் மரணம்
நிறுவனத்தை வளர்க்க சித்தார்த் முடிவு செய்து அதிகளவில் கடன் வாங்கினார். அதோடு, வருமான வரித்துறையின் மறைமுக அழுத்தம் சித்தார்த்துக்கு இருந்திருக்கிறது. கடனை கட்டமுடியாததால் மங்களூருவில் உள்ள ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் சித்தார்த். கஃபே காபி டே நிறுவனம்,சித்தார்த்தின் மரணத்துக்குப் பின் திண்டாடிப்போனது. அந்த நிறுவனமும் அவரது குடும்பமும் செய்வதறியாது திகைத்தபோது, கஃபே காபி டே நிறுவனத்துக்கு சி.இ.ஓ-வாக பொறுப்பேற்றார் சித்தார்த்தின் மனைவி மாளவிகா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் ஆகும்.

கஃபே காபி டே
கணவனின் மரணம் மனைவிக்கு பேரிடியாக இருந்திருக்கிறது. அந்த இழப்பு எவ்வளவு ஆழமானது, பயங்கரமானது, வேதனையானது என்பதை மாளவிகா ஹெக்டேவைப் பார்த்தால் புரியும். ஒருபுறம் கணவர் இறந்துவிட்டார், மறுபுறம் ரூ.7,000 கோடி கடனில் இருக்கும் நிறுவனம், மறுபுறம் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை. இப்படி பல சிரமங்கள் மாளவிகா ஹெக்டேவைச் சூழ்ந்தது.

சி.இ.ஓ
காபி டே நிறுவனத்துக்கு கடன் அதிகமாகிவிட்டால், கணவருக்கும் குடும்பத்துக்கும் கெட்ட பெயர். நிறுவனம் மூடப்பட்டால், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்கள் ரோட்டில் விழும். இதையெல்லாம் கருத்தில் கொண்டே மாளவிகா அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார்.

கடன்
காபி டே நிறுவனத்தின் கடன்களை நிறுவனம் நிச்சயம் திரும்பச் செலுத்தும் என தெரிவித்தார். அவர் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். நிறுவனத்தின் கடன் பாதியாக குறைந்தது. 7,200 கோடியில் இருந்து ரூ.3,100 கோடி ரூபாயாக கடன் குறைந்திருக்கிறது. இது மாளவிகா ஏற்படுத்திய மாற்றம். ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் கடினமான காலங்களில் ஊழியர்கள் ஆர்வமாக இருந்ததாகவும், வங்கிகள் பொறுமையாக காத்திருந்ததாகவும் மாளவிகா ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும், தனது கணவரின் கனவுகளை நனவாக்க பாடுபடுவேன் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் மாளவிகா ஹெக்டே. இதுதான் பெண் சக்தி என கொண்டாடுகிறார்கள், நிறுவன ஊழியர்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications