சித்ரா அணிந்தது கால்ஸ் படத்தில் பயன்படுத்திய நைட்டி.. ரொம்ப பிடிச்சிருக்குனு கேட்டு வாங்கிய சோகம்
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா இறக்கும் போது அணிந்திருந்த நைட்டி கால்ஸ் படத்தில் அவர் பயன்படுத்தியது என அந்த படத்தின் இயக்குநர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சின்னத்துரை நடிகை சித்ரா கடந்த புதன்கிழமை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தற்கொலை என உறுதியான நிலையில் போலீஸார் தற்கொலைக்கு தூண்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் இடையே கடந்த அக்டோபரில் பதிவு திருமணம் நடைபெற்றது. இதனால் இந்த மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்ஸ் திரைப்படம்
இந்த நிலையில் சித்ரா கால்ஸ் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஜெ சபரீஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்ரா, நந்திதா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் பிபிஓவில் பணியாற்றுவது போல் நடித்துள்ளார்.

இயக்குநர்
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் வெளியானது. ஆனால் இதை பார்க்க சித்ரா உயிருடன் இல்லையே என கால்ஸ் பட குழு ஆழ்ந்த வேதனையை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சித்ரா இறக்கும் போது அணிந்திருந்த நைட்டி குறித்து கால்ஸ் பட இயக்குநர் சபரீஷ் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

கால்ஸ் படம்
சித்ரா அணிந்திருந்த நைட்டி கால்ஸ் படத்திற்காக வாங்கியதாம். அந்த நைட்டி தனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதை தான் எடுத்து கொள்வதாக கேட்டு வாங்கிச் சென்றார். கடைசியில் தனக்கு பிடித்த நைட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளது படக்குழு.

சிறையில்
சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சித்ராவின் தாய் விஜயாவிடம் ஆர்டிஓ விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் இன்று ஹேமந்த் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications