"மிட்நைட் மீட்டிங்".. டார்கெட் 10,000..? அல்லாடும் டாக்டர் சரவணன்.. அனலடிக்கும் அறிவாலயம்.. என்னவாம்
மதுரை டாக்டர் சரவணனுக்கு திமுக மா.செ. பதவி கிடைக்குமா என தெரியவில்லை
சென்னை: இங்கிட்டும் இல்லாமல், அங்கிட்டும் இல்லாமல், நடுவில் தத்தளித்து கொண்டிருக்கிறாராம் டாக்டர் சரவணன்.. ஒரு கட்சியில் நிலையாக இல்லாமல், பதவிக்காக பல கட்சிகளுக்கு மாறினால் இந்த நிலைமைதான் ஏற்படும் என்று முணுமுணுக்கிறார்கள் மதுரை திமுகவினர்... என்ன நடந்தது?
டாக்டர் சரவணனை திமுக பக்கம் இழுத்து கொண்டு வருவதற்கான அசைன்மென்ட் மதுரையை சேர்ந்த திமுக புள்ளி ஒருவரிடம் சில மாதங்களுக்கு முன்பு தரப்பட்டிருந்ததாம்.
அதன்படியே அவரும், வலையைவீச, "திமுகவுக்கு வந்தால், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி" வேண்டும் என்று சரவணன் கொக்கி போட்டதாக தெரிகிறது.

Dr சரவணன்
ஏற்கனவே மதுரையில் திமுகவின் பல சீனியர்கள் உள்ளபோது, அவர்களுக்கே முக்கிய பதவிகளை ஒதுக்கி தராத நிலையில், சரவணனுக்கு எப்படி இவ்வளவு பெரிய பதவியை தருவது என்று யோசித்ததாம் திமுக மேலிடம்.. சீட்டு தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, மாற்று கட்சிக்கு அதுவும் முற்றிலும் சித்தாந்த மாறுபாடுகள் நிறைந்த பாஜகவுக்கு சென்றுவிட்ட சரவணனுக்கு எப்படி இந்த பதவியை தருவது? அப்படியே தந்தாலும் மதுரை திமுகவுக்குள் மீண்டும் அதிருப்திகள் வெடிக்குமே? என்ற குழப்பத்தில் அமைதி காத்துள்ளது திமுக மேலிடமும்.

2 பிளான் + 2 சொதப்பல்
இதற்கு பிறகு, மதுரை திமுக சீனியர்களான அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏ கோ.தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்முத்து ராமலிங்கம், மணிமாறன் போன்றோர், சரவணனை மீது ஏற்கனவே அதிருப்தியில் உள்ள நிலையில், சரவணனைக் கட்சியில் சேர்க்க வேண்டாம். அப்படி சேர்த்தால் அவர் இங்கேயும் வந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்" என்று பகுதி செயலாளர்கள் சிலர் திமுக தலைமைக்கு கடிதமும் எழுதியதாக செய்திகள் பரபரபத்தன. இப்போது விஷயம் என்னவென்றால், மாவட்ட செயலாளர்கள் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தமிழகமெங்கும் நடந்து வரும் நிலையில், மதுரையிலும் போட்டா போட்டி துவங்கி உள்ளது..

டாக்டர் சரவணன்
அந்தவகையில், வடக்கு பகுதியின் மா.செ. பதவிக்கு கடுமையான ரேஸ் நடந்து கொண்டிருக்கிறது.. தளபதி, பொன்முத்து ராமலிங்கம் என பல சீனியர்கள் முட்டி மோதி வரும் நிலையில், இதே வடக்கு மாவட்ட மா.செ. பதவி தனக்கு வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளாராம் டாக்டர் சரவணன்.. காரணம், பாஜகவில் நின்று, இதே வடக்கு தொகுதியில் தளபதியிடம் தோற்றவர் சரவணன்.. மீண்டும் இதே வடக்கு பகுதி மா.செ. போஸ்டிங் கேட்கிறாராம்.. இந்த வடக்கு மா.செ. போஸ்டிங்கிற்கு பொன்.முத்துராமலிங்கம் பெயர்தான் பலமாக அடிபட்ட நிலையில், தற்போது, மாணவரணியைச் சேர்ந்த அதலை செந்தில் என்பவரின் பெயர் புதிதாக அடிபட துவங்கி உள்ளது..

பாசிட்டிவ் மெசேஜ்
ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுக்காத நிலையில், அப்செட்டில் இருந்த பொன்.முத்துராமலிங்க தரப்பு, தற்போது நேரடியாகவே துரைமுருகனிடமே சென்று முறையிட்டுள்ளதாக தெரிகிறது.. "சீனியர்களை ஒதுக்க கூடாது" என்று துரைமுருகன் எடுத்து சொல்லியும், அதற்கு பாசிட்டிவ் தகவல் எதுவும் மேலிடத்தில் இருந்து கிடைக்கவில்லையாம்.. எனவே பொன்.முத்துராமலிங்கத்துக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் மீண்டும் என்ட்ரி தந்துள்ளார் சரவணன்.. ஆனால், இதுவரை பச்சைக்கொடி யாரும் இவருக்கு காட்டவில்லை..

போஸ்டிங் சான்ஸ்
மிட்நைட்டில் அன்று திடீரென கட்சியில் இருந்து விலகி, பிடிஆரை சந்திக்க ஓடினாரே சரவணன்.. அப்போது, 10 ஆயிரம் பேரை திரட்டி கொண்டுவந்து, திமுகவில் இணைத்தால், நிலவி வரும் எதிர்ப்புகளை ஓரளவு சமாளிக்க முடியும் என்று சரவணனிடம் பிடிஆர் சொன்னதாகவும், இதை செய்துமுடித்துவிட்டால், அவர் கேட்ட போஸ்டிங் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகவும் செய்தி ஒன்று கசிந்தது.. ஒருவேளை அந்த ரூட்டில் சரவணன் இறங்க போகிறாரா? 10 ஆயிரம் பேரை திரட்டி கொண்டு வருவாரா? என்று தெரியவில்லை. இதற்குநடுவில், சரவணன் குறித்து இன்னொரு செய்தியும் வட்டமடிக்கிறது..

ஆசை ஆசையாய்..
பாஜகவில் மாநில பொறுப்பு வகிக்கும் மதுரை பிரமுகர் ஒருவரை, முக்கிய பதவி கிடைக்கும் என்று சொல்லி திமுக பக்கம் இழுக்க முயன்றாராம் சரவணன்.. அந்த பிரமுகரும் அதற்கு ஓகே சொல்ல, அறிவாலயத்துக்கு சரவணன் அழைத்து வந்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், யாருமே அந்த பாஜக பிரமுகரை கண்டுகொள்ளவில்லையாம்.. இதனால் அதிர்ந்துபோன அந்த பிரமுகர், மறுநாளே ஜேபி நட்டாவை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஓடிச்சென்று கலந்து கொண்டாராம்.. ஆனாலும், சரவணனுடன் அறிவாலயத்தில் நடமாடிய போட்டோக்கள் பாஜக மேலிட பார்வைக்கு சென்றுவிட்டதாம்..

அறிவாலயம்
"சும்மாதான் அறிவாலயம் பக்கம் போனேன், கட்சியில் சேரவில்லை" என்று அந்த பிரமுகர் தன்னிலை விளக்கம் தந்து வருகிறாராம்... சரவணன் ஒருநபரை இழுத்து வந்ததற்கே, சலசலப்புகள் கிளம்பி விட்ட நிலையில், 10 ஆயிரம் பேரை எப்படி அழைத்து செல்வார் என்று கேள்வி எழுப்புகிறார்கள் மதுரைக்காரர்கள்.. ஒருகட்சியில் இல்லாமல், "ஆல் பார்ட்டி மெம்பர்" ஆக உருமாறினால் இப்படித்தான் நடக்கும் என்றும் சரவணன் மீதான விமர்சனத்தையும் முன்வைக்கிறார்கள்.. எனினும், இந்த விமர்சனங்களை எல்லாம் நொறுக்கி தள்ளிவிட்டு, சரவணன் மேலே வருவாரா? அந்த வடக்கு மா.செ. போஸ்டிங்கை எப்படியாவது வாங்கிவிடுவாரா? தெரியவில்லை பார்ப்போம்..!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications