"லாஸ்ட் வார்னிங்".. மேலிடத்துக்கு போன மேட்டர்.. அங்கே பாஜக + இங்கே திமுக.. அசராத எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு புது நெருக்கடி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் நெருக்கடி சூழ்ந்து வரும் நிலையில், பாஜக கடைசி மணியை அடித்திருக்கிறதாம்.. இதையடுத்து, ஓபிஎஸ்ஸுடன் எடப்பாடி இணங்கி செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.
ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்புவதால், அதற்கான அறிவுரைகளைகளும் சிக்னல்களும் தொடர்ந்து எடப்பாடிக்கு தரப்பட்டு வருவதாகவும், ஆனால், அதை எடப்பாடி கண்டுகொள்ளாமலேயே உள்ளதாகவும் கூறுகிறார்கள்.
நெடுஞ்சாலை துறை ஊழல், சம்பந்தி ஊழல் விவகாரம், கொடநாடு விவகாரம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டு வருகிறது.

பாண்டித்துரை
இதையடுத்து, பாஜகவின் உத்தரவுக்கு எடப்பாடி பழனிசாமி பணிவாரா? ஓபிஎஸ்ஸை ஏற்பாரா? அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்விகள் வட்டமடிக்கின்றன... கடந்த 2 வாரங்களாகவே, எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்து வருகிறது மேலிடம்.. அதன் முதல்அஸ்திரம்தான் புதுக்கோட்டை பாண்டித்துரை ரெய்டு விவகாரமாம்.. பாண்டித்துரை இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில், எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஆவணங்கள் அவரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது..

அபாயமணி
நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி காலத்தில், நெடுஞ்சாலைகளில் ஒளிரும் போர்டுகள் தமிழகம் முழுவதும் அமைக்கும் பணிக்கான டெண்டர் பாண்டித்துரையின் நிறுவனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டதாம்.. மேலும், போக்குவரத்து துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான டெண்டரும், இதே பாண்டித்துரைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இன்னமும் பிடிகொடுக்காமல் இழுத்தடிக்கப்படும் நிலையில், எடப்பாடி சம்பந்தப்பட்டவர்களுக்குதான் செக் வைத்து ஆட்டத்தை தொடங்கி உள்ளது பாஜக.. பாண்டித்துரை மீதான ரெய்டு, எடப்பாடிக்கு தரப்பட்ட அபாயமணி என்கிறார்கள்..

அசரலையே
அப்போதும் எடப்பாடி அசராத நிலையில்தான், அடுத்த ஷாக் சட்டசபையில் தரப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தாக்கல் செய்ததுமே எடப்பாடி தரப்பு லேசாக அதிர்ந்து போய், டெல்லிக்கே தொடர்பு கொண்டு, சில தலைவர்களிடம் முறையிடப்பட்டதாம்.. ஆனால், எதிர்பார்த்தபடியே, பாஜக இந்த விஷயத்திலும் செக் வைத்துள்ளது.. முதலில் ஒன்று சேருங்கள், எல்லாம் சரியாகும், தொடர்ந்து முரண்டு பிடித்தால், எந்த உதவியும் தங்களால் செய்ய முடியாது என்று கடைசி மணியை அடித்து விட்டார்களாம்..

சிகப்பு சிக்னல்
இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்பது இனிமேல்தான் தெரியவரும். இப்போதைக்கு, திமுகவைவிட, பாஜகவை சமாளிப்பதுதான் எடப்பாடிக்கு பெரிய சிக்கலாக இருக்கிறதாம்... அதனால்தான், சட்டசபையில் இந்தி திணிப்பு விவகாரத்தில்கூட, பட்டும்படாமல் விலகியதாம்.. அன்று சட்டசபையில் திமுக இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் போடுவதற்கு முன்பேயே அலர்ட் ஆகிவிட்டாராம் எடப்பாடி.. இந்தி எதிர்ப்பு என்ற விஷயத்தில், அதிமுகவுக்கு எப்போதுமே சிக்கல்தான்.. அன்றைய தினம், சட்டசப்பேரவையில், இந்த விஷயத்தில் பாஜக பக்கம் எடப்பாடியால் நிற்க முடியாது.. காரணம் திராவிட கட்சி என்பது அதிமுகவுக்கும்தான் பொருந்தும்..

லாஸ்ட் வார்னிங்
எனவே, பாஜகவுக்கு ஆதரவு தந்தால், பாஜக Vs திமுக நிலைப்பாடு இங்கு உருவாகிவிடும்.. அல்லது திமுகவுக்கு ஆதரவு தந்தால், மேலிட கோபத்துக்கு ஆளாக நேரிடும்.. போதாக்குறைக்கு அன்றைய தினம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஆணைய விவகாரமும் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், இவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக தவிர்க்கவே, உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தை எடப்பாடி திடுதிப்பென்று அறிவித்ததாக சொல்கிறார்கள்.. ஆனால், அந்த ஆர்ப்பாட்டம் டிவியில் நேரடி ஒளிபரப்பு காட்டப்பட நேர்ந்துவிடும் என்பதாலேயே, அதையும் நடத்தவிடாமல், எடப்பாடி டீமை உடனடியாக கைது செய்து, ஸ்டாலின் ஸ்கோர் செய்தது வேறு விஷயம்.. ஆனாலும் ஓபிஎஸ்ஸிடம் இணங்கி செல்லவும் விரும்பாமல், பாஜகவிடம் பணிந்து செல்லவும் விரும்பாமல் எடப்பாடியின் பிடிவாதம் இன்னமும் நீள்கிறதாம்..!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications